Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


அனைத்து மக்களையும் பாதுகாப்பது தொடர்பான சர்வதேச உடன்படிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

View previous topic View next topic Go down

அனைத்து மக்களையும் பாதுகாப்பது தொடர்பான சர்வதேச உடன்படிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

Post by oviya on Thu Dec 10, 2015 2:24 pm

அனைத்து மக்களையும் பாதுகாப்பது தொடர்பான சர்வதேச உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது மற்றும் அந்த உடன்படிக்கையை நாட்டில் நடைமுறைப் படுத்துவது தொடர்பான வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பலாத்காரமாக காணாமல் போகச்செய்வதில் இருந்து அனைத்து மக்களையும் பாதுகாத்தல் என்கின்ற சர்வதேச உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.


பலவந்தமாக காணாமல் போகச் செய்வது முற்று முழுதாக மனித உரிமை மீறலாக கருதப்படும்.

எனவே இந்த விடயத்தை தடைசெய்து அதுபோன்ற தவறிழைப்பவர்களை நீதிக்கு முன் நிறுத்தி அதற்கான தண்டனையை பெற்றுக் கொடுப்பதற்கு அனைவரையும் அரசுக்கு சார்பாக இயங்கச் செய்ய வேண்டும்.

இவ்வாறான நோக்கத்தை கொண்ட குறித்த உடன்படிக்கையில் இதுவரை 94 நாடுகள் கைச்சாத்திட்டுள்ள நிலையில் 51 நாடுகள் மாத்திரமே அதனை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

எனவே நாட்டில் தற்போதைய அரசுக்கு கிடைத்துள்ள மக்கள் ஆணையின் படி, அனைத்து மக்களினுடைய மனித உரிமைகளையும் பாதுகாத்து நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாது என்கின்ற உத்தரவாதத்தினை வழங்க வேண்டும். என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum