Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


தெல்லிப்பளை புற்று நோய் வைத்தியசாலைக் கழிவுகள் அகற்றப்படாமையால் சுகாதார சீர்கேடு

Go down

தெல்லிப்பளை புற்று நோய் வைத்தியசாலைக் கழிவுகள் அகற்றப்படாமையால் சுகாதார சீர்கேடு

Post by oviya on Thu Oct 15, 2015 2:00 pm

தெல்லிப்பளை புற்று நோய் வைத்தியசாலையில் இருந்து அகற்றப்படும் கழிவுகள் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக அகற்றப்படாத நிலமையில் காணப்படுவதினால் பாரிய சுகாதார சீர் கேடுகளை சந்திக்க வேண்டிய அபாய நிலமை காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புற்று நோய் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளில் ஒரு பகுதி மிகவும் பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டு மிகவும் கூடிய வெப்ப நிலையில் எரியூட்டி அழிக்கப்பட வேண்டியவைகள் ஆகும்.

இந்த வகையில் அழிக்கப்பட வேண்டிய கழிவு பொருட்கள் மிகவும் அவதானமாக அகற்றப்பட்டு பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ள போதிலும் கடந்த ஒன்றரை வருடங்களாக அத்தகைய கழிவுகள் அகற்றப்படாத நிலமையே காணப்படுகின்றது.

இதனால் மேலும் இத்தகைய பாதுகாப்பு மிக்க கழிவுகளை தொடர்ந்து பாதுகாப்பான முறையில் வைத்திருக்க முடியாத நிலமையை கருத்தில் கொண்டு இத்தகைய கழிவு பொருட்களை அகற்ற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வைத்தியசாலை வட்டாரங்கள தெரிவித்துள்ளன.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum