Top posting users this month
No user |
குப்பையைத் தொட்டியில் போட்டால் இலவச WiFi இணைப்பு: மும்பை இளைஞர்களின் திட்டம்
Page 1 of 1

குப்பைகளை அதற்குரிய குப்பைத் தொட்டிகளில் போட்டால் இலவச வை-ஃபை மூலம் இணைய வசதி கிடைக்கும் திட்டத்தை மும்பையில் தொடங்கியுள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த ப்ரதீக் அகர்வால், அவரது நண்பர் ராஜ் தேசாய் இருவரும் இணைந்து 'வை-ஃபை டிராஷ் பின்' என்ற கண்டுபிடிப்பைச் செய்துள்ளனர்.
இதுகுறித்து ப்ரதீக் கூறுகையில், வெளிநாடுகளில் சாலைகளும், சுற்றுப்புறங்களும் குப்பைகள் இல்லாமல் சுத்தமாக இருப்பதைப் பார்த்தோம்.
நம் நாட்டிலும் சுற்றுப்புறம் தூய்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் அதனை எப்படிச் செய்வது என்பது தெரியவில்லை.
இந்நிலையில், நாங்கள் ஒரு முறை இசை விழா ஒன்றுக்குச் சென்றிருந்தோம்.
அங்கு சரியான சிக்னல் இல்லாததால், இணையம் வழியாகவும் எங்களின் நண்பர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை. இறுதியில் அவர்களை 6 மணி நேரம் கழித்து கண்டுபிடித்தோம்.
அந்த இசை விழாவில் உணவு வழங்கப்பட்டதால், அந்த இடம் முழுக்க குப்பைகளாலும் நிரம்பியிருந்தது.
அப்போது தான் எங்களுக்கு ஓர் எண்ணம் தோன்றியது. குப்பைகளை அதற்குரிய குப்பைத் தொட்டிகளில் போட்டால், உடனே இலவசமாக வை-ஃபை வசதி கிடைக்கும்படி செய்யலாம் என்று தோன்றியது.
குப்பையை தொட்டியில் போட்டவுடன் தொட்டியில் ‘கோட் நம்பர்’ தெரியும். அதன் மூலம் இலவச ‘வை-ஃபை’ இணைப்பு பெறலாம் என்று தெரிவித்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum