Top posting users this month
No user |
Similar topics
ரைஸ் கேக் வித் வெஜிடெபிள்ஸ் - டோக்போக்கி (Rice cake with Vegetables)
Page 1 of 1
ரைஸ் கேக் வித் வெஜிடெபிள்ஸ் - டோக்போக்கி (Rice cake with Vegetables)
கொழுக்கட்டை (Rice cake) - 2 கப் (300 கிராம்)
பெரிய வெங்காயம் - 1/2
கேரட் - 1
முட்டைகோஸ் - 3 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
மிளகாய் பேஸ்ட் (Hot chilli paste) - 1 டீஸ்பூன் (காரத்திற்கு ஏற்றவாறு கூட்டி அல்லது குறைத்து கொள்ளவும்)
தக்காளி கெட்சப் - 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயத்தாள் (Leek/Scallion) - 1
சர்க்கரை - 1 டீஸ்பூன்
பூண்டு - 2 பல்
பொரித்த வெள்ளை எள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - காய்கறிகளை வதக்க தேவையான அளவு
ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைத்து அதில் ரைஸ் கேக்கை (கொரியாவில் ரெடிமேடாகவே கிடைக்கும்) போட்டு வேகவைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
(இந்திய முறைப்படி பச்சரிசியில் கொழுக்கட்டை செய்து ரெடியாக வைத்து கொள்ளவும்.
வெங்காயம், கேரட் இவைகளை சுத்தம் செய்து வெட்டி வைக்கவும். (கொஞ்சம் திக்கான துண்டுகளாகவே இருக்கட்டும்.)
தக்காளி மற்றும் சில்லி பேஸ்டை மிக்ஸ் பண்ணி இதனுடன் கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும், பின் அதனுடன் சர்க்கரையை சேர்த்து கடைசியில் எள்ளை சேர்க்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் வெங்காயம், பூண்டு, வெங்காயத்தாள், முட்டைகோஸ், கேரட் இவைகளை போட்டு வதக்கவும். (காய்கறிகள் சுமாராக வதங்கினால் போதுமானது)
பின் இதனுடன் கொழுக்கட்டையையும், தயாரித்து வைத்திருக்கும் சாஸையும் சேர்த்து 5 நிமிடம் வேகவைத்து எடுத்து சூடாக பரிமாறவும்.
சுவையான கொரிய வகை டோக்போக்கி (ரைஸ் கேக் வித் வெஜிடபிள்ஸ்) தயார்.
மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்ற உணவு இது.
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Similar topics
» ரைஸ் கேக் வித் வெஜிடெபிள்ஸ் - டோக்போக்கி
» ரைஸ் கேக் வித் வெஜிடெபிள்ஸ்
» சொக்லெட் கேக் (Chocolate Cake)
» ரைஸ் கேக் வித் வெஜிடெபிள்ஸ்
» சொக்லெட் கேக் (Chocolate Cake)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum