Top posting users this month
No user |
பெண்ணின் மூளையில் 5 செ.மீ. ஆழம் துளைத்த கத்திரிக்கோல்: அறுவை சிகிச்சை மூலம் அகற்றி சாதனை
Page 1 of 1

திருநெல்வேலியில் பெண் தொழிலாளியின் மூளையைத் துளைத்த கத்திரிக்கோலை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
தென்காசியை அடுத்த குத்துக்கல்வலசை பகுதியைச் சேர்ந்த 39 வயதுப் பெண் ஒருவர், பீடி சுற்றி வருகிறார்.
கூலித் தொழிலாளியான இவரது கணவர், கடந்த மார்ச் மாதம் 25ம் திகதி, இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, பீடி இலை வெட்ட வைத்திருந்த கத்திரிக்கோலை தூக்கி எறிந்துள்ளார்.
அந்தக் கத்திரிக்கோல் எதிர்பாராதவிதமாக அப்பெண்ணின் தலையில் இறங்கியுள்ளது.
இதையடுத்து, உடனடியாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.
பரிசோதனையில், கத்திரிக்கோல் தலையின் தோல்பகுதியை துளைத்து, மொத்தமாக 5 செ.மீ. ஆழம் சென்றிருந்தது தெரியவந்தது.
மருத்துவர்களின் ஒன்றரை மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, கத்திரிக்கோலை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
கடந்த 3 மாதங்களாக மருத்துவக் கண்காணிப்பில் இருந்த அந்தப் பெண், தற்போது முற்றிலும் குணமடைந்து வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும், இந்த அரிய சாதனையை நிகழ்த்திய மருத்துவக் குழுவினருக்கு, மருத்துவமனை டீன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum