Top posting users this month
No user |
நிமல், தினேஸ் ஆகியோருக்கு 9 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு
Page 1 of 1

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் தினேஸ் குணவர்தன ஆகிய இருவருக்கும் ஆதரவளித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சித் தலைவராக நிமல் சிறிபால டி சில்வா மற்றும் தினேஸ் குணவர்தன ஆகியோரை நியமிக்க வேண்டுமேன ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சில தரப்பினர் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் இரண்டு தரப்பினரும் சபாநாயகரிடம் கையொப்பங்களை திரட்டி ஆவணங்களை சமர்ப்பிக்க உள்ளனர்.
இந்த இரண்டு ஆவணங்களிலும் ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம் இட்டுள்ளனர்.
இரண்டு தரப்பினைச் சேர்ந்தவர்களும் சத்தியக் கடதாசி ஊடாக எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்குமாறு கோரியுள்ளனர்.
இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவராக நிமல் சிறிபால டி சில்வாவை நியமிக்குமாறு கோரி 65 உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இந்த ஆவணங்களில் தற்போது அமைச்சுப் பதவிகளை வகித்து வரும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் எவரும் கையொப்பமிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum