Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


விரைவாக தீர்வு காணப்பட வேண்டிய மனிதாபிமான பிரச்சினை

Go down

விரைவாக தீர்வு காணப்பட வேண்டிய மனிதாபிமான பிரச்சினை Empty விரைவாக தீர்வு காணப்பட வேண்டிய மனிதாபிமான பிரச்சினை

Post by oviya Tue Oct 13, 2015 12:36 pm

யுத்தகாலத்தில் பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் ஆகியவற்றின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் தாம் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றமையை எதிர்த்து நேற்று முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பு, அநுராதபுரம், தும்பறை, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட பல்வேறு சிறைச்சாலைகளில் உள்ள அரசியல் கைதிகள் இவ்வாறு நேற்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் நாம் விடுதலை செய்யப்படுவோம் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அந்த நோக்கம் நிறைவேறவில்லையென்றும் எனவே ஒரு முடிவுக்கு வரும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் கைதிகள் தெரிவிக்கின்றனர்.

எமது விடுதலைக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளோம். எனினும் தற்போது வரை எவையும் கருத்தில் கொள்ளப்படவில்லை. புதிய ஆட்சியாளர்களுக்கும் எமது விடுதலை தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்த போதும் அவர்களும் தொடர்ந்தும் பராமுகத்துடனேயே இருக்கின்றார்கள்.

எனவே இறுதி முயற்சியாக இந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நாங்கள் ஆரம்பித்துள்ளோம் என்றும் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர். கடந்த காலத்தில் எமது விடுதலை தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம்.

அத்துடன் எமது உறவுகள் நாடளாவிய ரீதியில் பல்வேறு கவனயீர்ப்புப் போராட்டங்களையும் நடத்தியிருந்தனர். ஆனால் இன்று வரை எமது விடுதலைக்கு எவ்விதமான ஆக்கபூர்வமான செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அரசியல் கைதிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தினமும் சிறைகளில் முடங்கி வருந்துவதை விடவும் வாழ்வா? சாவா? என இறுதி முயற்சியாக இந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றோம். எனவே அனைத்து தரப்பினரும் எமது நியாயமான கோரிக்கையை கருத்தில் கொண்டு போராட்டத்திற்கு வலுசேர்க்குமாறு கோருகிறோம் எனவும் அரசியல் கைதிகள் குறிப்பிடுகின்றனர்.

இது இவ்வாறிருக்க அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கடந்த 20 வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் உறவினர்களும் உருக்கமான வேண்டுகோளை விடுத்து வருகின்றனர்.

நல்லாட்சி அரசாங்கமானது நல்லிணக்கப் பணிகளில் ஒன்றான அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் பராமுகமாக இருக்கக்கூடாது எனவும் கைதிகளை உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அரசாங்கமே தள்ளியுள்ளது என்றும் உறவினர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும் பல்வேறு சிவில் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளும் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

குறிப்பாக பிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு விசாரணைகளின்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவருக்கும் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது நாட்டில் நல்லாட்சி நோக்கிய பயணம் உருவாக்கப்பட்டுள்ளது. இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான தருணம் ஏற்பட்டுள்ளது. ஆகவே அதனை அரசாங்கம் தவறவிடக்கூடாது. அந்தவகையில் நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படவேண்டும்.

இக்கருமத்தை அரசாங்கம் தாமதிக்காது விரைந்து முன்னெடுக்க வேண்டும். அடுத்த ஒருவார காலத்தினுள் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அதுமட்டுமன்றி மக்கள் விடுதலை முன்னணியும் அரசியல் கைதிகளை விரைவாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் மஹிந்த அணியில் இருக்கின்ற ஜனநாயக இடதுசாரி முன்னணியில் தலைவர் வாசுதேவ நாணயக்காரவும் அரசியல் கைதிகளை விரைவாக விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியிருக்கின்றார்.

இவ்வாறு அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் என பல்வேறு தரப்புக்களும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வருகின்ற போதிலும் அரசாங்கம் இந்த விடயத்தில் அக்கறையுடன் செயற்படுவதற்கான அறிகுறியை காணமுடியவில்லை.

குறிப்பாக நாட்டில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை என்றும் பல்வேறு குற்றங்களை செய்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்திருக்கிறார்.

சிறையிலுள்ள தமிழ் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் நீதியமைச்சுக்கு தற்போது எந்த வகிபாகமும் கிடையாது. இந்த பொறுப்பு தற்போது சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு சட்டம் ஒழுங்கு தொடர்பான அமைச்சிடமே உள்ளது.

தடுப்புக் காவலிலும், சிறைச்சாலைகளிலும் அரசியல் கைதிகள் என்று எவரும் கிடையாது. இதற்கு தமிழ் கைதிகளும் விதிவிலக்கல்ல. கொலை, கொள்ளைகள், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டோரே சிறையில் கைதிகளாக உள்ளனர். எனவே இவ் விடயம் சட்ட ரீதியாகவே அணுகப்பட வேண்டும் எனவும் நீதி அமைச்சர் திட்டவட்டமாக குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 20 வருட காலமாக சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 200 க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் அவர்களுக்கு ஒரு சட்டரீதியான தீர்வை அரசாங்கம் பெற்றுக் கொடுப்பதற்கு தயங்குவது கவலைக்குரிய விடயமாகும்.

இவர்கள் அனைவரும் யுத்த காலத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள். இந்நிலையில் அவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை எடுத்து சட்ட ரீதியான தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். அதனை விடுத்து 20 வருடகாலமாக தடுப்புக்காவலிலேயே வைத்திருப்பது ஒரு நியாயமற்ற செயற்பாடாகவே காணப்படுகின்றது.

இந்த அரசியல் கைதிகளும் கடந்த காலத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதும் பின்னர் பல்வேறு உத்தரவாதங்களின் அடிப்படையில் உண்ணாவிரதத்தை கைவிடுவதுமாக இருந்து வந்துள்ளனர். அவ்வப்போது அரசியல் தலைவர்களும் இந்தப் பிரச்சினை தொடர்பாக குரல் எழுப்புவதும் பின்னர் மறந்து விடுவதுமாகவே நிலைமைகள் கடந்த காலங்களில் இருந்து வந்துள்ளன.

ஆனால் இந்தப் பிரச்சினைக்கு இதுவரை ஆக்கபூர்வமான தீர்வு எட்டவில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் அண்மையில் வெளியிட்ட இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையிலும் இந்த அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது.

யுத்தம் முடிவடைந்த பின்னர் அரசாங்கத்திடம் சரணடைந்த முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு செயற்பாட்டின் பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த 20 வருடகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் நிலைமை இவ்வாறு காணப்படுகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.

அதுமட்டுமன்றி எதிர்க்கட்சியில் இருந்தபோது அரசியல் கைதிகளின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த ஐக்கிய தேசியக்கட்சி தற்போது ஆளும் கட்சியாக வந்த பின்னர் இந்த விடயத்தை கண்டும் காணாதது போல் இருப்பதும் விசனத்துக்குரியதாகும்.

குறிப்பாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நாட்டில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லையெனக் கூறுவது ஆச்சரியமளிக்கும் கூற்றாக உள்ளது.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்தி இந்த அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வைக் காண்பதற்கு முன்வரவேண்டும். பிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசியக்கூட்டமைப்பு கூறும் வகையில் இந்தப் பிரச்சினைக்கு ஒரு வார காலத்திற்குள் தீர்வைக் கண்டுவிடுவது அவசியமாகும்.

எனவே இந்த விடயம் தொடர்பில் சிவில் அமைப்புக்களும் மத அமைப்புகளும் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும். இந்தப் பிரச்சினையை தொடர்ந்தும் நீடித்துக் கொண்டிருப்பதற்கு இடமளிக்காமல் மிகவும் விரைவில் இந்த கைதிகளை விடுதலை செய்வதற்கும் அல்லது சட்டரீதியான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கைகளை அதிகாரத்தில் இருக்கின்றோர் முன்னெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படாவிடின் நாட்டில் பாரிய பிரச்சினை உருவெடுக்கும் - ஆனந்தசங்கரி
» இனரீதியான பிரச்சினை தமிழர்களை பல வழிகளில் பின்னடைய செய்துள்ளது: த.கலையரசன்இனரீதியான பிரச்சினை தமிழர்களை பல வழிகளில் பின்னடைய செய்துள்ளது: த.கலையரசன்
» மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு கால அவகாசம் வழங்கும் ஐ.நா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum