Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பொது தேர்தலில் மக்கள் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கி எமது பேரம் பேசும் சக்தியை அதிகரிக்க வேண்டும்: யோகேஸ்வரன்

Go down

பொது தேர்தலில் மக்கள் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கி எமது பேரம் பேசும் சக்தியை அதிகரிக்க வேண்டும்: யோகேஸ்வரன் Empty பொது தேர்தலில் மக்கள் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கி எமது பேரம் பேசும் சக்தியை அதிகரிக்க வேண்டும்: யோகேஸ்வரன்

Post by oviya Tue Jul 07, 2015 2:36 pm

எதிர்வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கி கூடுதலான உறுப்பினர்களை தெரிவு செய்வதன் மூலம் புதிய அரசாங்கத்துடன் பேரம் பேசும் சக்தியை அதிகரிக்க முடியும் என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தெற்கிலே சிங்கள தேசிய கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை எமது தேசிய இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் எமக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு செங்கலடியில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தொடர்ந்து உரையாற்றுகையில்,“மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் வாக்குகளை சிதைப்பதற்காக சிங்கள கட்சிகளில் பல தமிழர்கள் போட்டியிடவுள்ளதாக அறிகின்றேன்.

கடந்த காலங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டு கட்சிகளால் துரத்தப்பட்ட சிலர் பணத்துக்காக புதிய வடிவில் களமிறங்கவுள்ளனர். அவர்களின் முகத்திரையைக் கிழிப்பதற்கான சந்தர்ப்பமாக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலைப் பயன்படுத்த வேண்டும்.

எமது மாவட்டத்தைப் பொறுத்தவரை 73 சதவீதமான தமிழர்களின் வாக்குகள் உள்ளன. எமது மக்கள் வாக்களிப்பதிலுள்ள ஆர்வக் குறைவின் காரணமாக எமது பிரதிநிதித்துவம் வேறோரு சமூகத்திற்கு செல்கிறது.

கடந்த 2010ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 4226 வாக்குகள் குறைவடைந்திருந்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு முஸ்லிம்களும் ஒரு தமிழனுமே நாடாளுமன்றம் செல்லும் நிலை ஏற்பட்டிருக்கும். இவ்விடயம் தொடர்பாக எமது மக்கள் சிந்திக்க வேண்டும்.

இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் சிங்கள கட்சிகளில் பல தமிழ் மற்றும் முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். கடந்த காலங்களில் நாடாளுமன்ற தேர்தல்களில் தேசிய கட்சியில் போட்டியிடும் தமிழர்களின் வாக்குகளினால் வேறோரு இனத்தவரே வெற்றி பெற்றுள்ளனர் என்பது நாம் அறிந்த உண்மை.

காலம் காலமாக நாம் விட்ட தவறினை இந்த தேர்தலில் திருத்திக் கொள்ள வேண்டும். தேசிய அரசியலில் சிங்கள கட்சிகளிடையே நடைபெறும் மாற்றங்கள் காரணமாக இம்முறை தனிப் பெரும்பான்மையோடு ஒரு அரசாங்கம் அமைவது சந்தேகமாவுள்ளது.

இந்த நிலையில் புதிதாக அமையப்போகும் தேசிய அரசாங்கத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு அவசியம் தேவைப்படும். இந்நிலையில் தமிழ் மக்கள் அதிகபடியாக வாக்களித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிக ஆசனங்களை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் ஆதரவு வழங்குவதற்காக பேரம் பேசுவதனுடாக எமது இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை முன்வைக்க முடியும்.

எமது பிரதேசங்கள் தொடர்ந்தும் அபிவிருத்திகளில் புறக்கணிப்பதற்கு இடமளிக்க முடியாது கடந்த காலங்களில் தமிழ் மக்களின் வாக்குகளினால் நாடாளுமன்றத்திற்கு சென்ற வேறு இனத்தவர்கள் எமது பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் அவர்களது பிரதேசங்களை அபிவிருத்தி செய்துள்ளார்கள்.

அதற்கு மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டிருந்த எம்மவர்களும் துணைபோயுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 44 ஆயிரம் விதவைகள் வாழ்கின்றனர். கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்ட பின்பு 130க்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளனர்.

பல பிள்ளைகள் தமது தந்தையாரைத் தேடித் திரிகின்றார்கள். எனது அலுவலகத்திலே பிள்ளைகளோடு தாய்மார் தினமும் வருகின்றார்கள். இது எமது பிரதேச மக்களிடையே ஒரு பாரிய பிரச்சினைகளாக காணப்படுகிறது.

செங்கலடிப் பிரதேசத்தில் தான் அதிகமானவர்கள் கடத்தப்பட்டிருக்கிறார்கள். இன்று பாதிக்கப்பட்ட பெரும்பாலான பிள்ளைகள் தந்தையாரை இழந்தவர்களாகியிருக்கின்றார்கள். எமது உறவுகளைக் கடத்தியவர்கள் கடந்த அரசாங்கத்தில் சகல சுகபோகங்களையும் அனுபவித்து சொகுசு வாகனங்களில் திரிகிறார்கள்.

பல சௌகரியங்களை கடந்த காலங்களில் அனுபவித்தார்கள். கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியாகவிருக்கிறார்கள். ஆனால் கணவனை இழந்த நிலையில் பிள்ளைகள் சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்படும் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்று அழுத குரலிலே கடத்தப்பட்டவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என்னிடம் கூறினார்கள்.

இந்த அவல நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்குடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடத்தப்பட்டவர்கள் சார்பில் ஆராய்ந்து வருகிறது. யார் கடத்தினார்கள்? யார் இந்த அநியாயங்களைச் செய்தார்கள் என மக்கள் சாட்சியமளிக்கத் தயாராக விருக்கிறார்கள்.

மக்கள் ஊடாக அவர்களை நீதியின் முன் நிறுத்தவிருக்கிறோம். எமது மக்களுக்கு நடந்த அநீதிகளைத் தட்டிக் கேட்பவர்களாக நாங்கள் இருக்கின்ற காரணத்தினால் இனியும் நாங்கள் பொறுமையாகவிருக்க முடியாது” என்றார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum