Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தெலுங்கு நடிகர் சோபன் பாபுவின் சிலையை அகற்றும் போராட்டம்! சென்னையில் பரபரப்பு

Go down

தெலுங்கு நடிகர் சோபன் பாபுவின் சிலையை அகற்றும் போராட்டம்! சென்னையில் பரபரப்பு Empty தெலுங்கு நடிகர் சோபன் பாபுவின் சிலையை அகற்றும் போராட்டம்! சென்னையில் பரபரப்பு

Post by oviya Mon Jun 15, 2015 2:38 pm

சென்னையில் சோபன்பாபு சிலையை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழர் முன்னேற்ற படையின் நிறுவனர் மற்றும் அவரது இயக்கத்தைச் சேர்ந்தவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கை நல்லூரில் கோவில் ஒன்றில், அமைக்கப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் சிலை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அகற்றப்பட்டது.

இதற்கு தமிழ் ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பிரபாகரன் சிலையை அகற்றியதைக் கண்டித்தும், மீண்டும் அந்த சிலையை நிறுவ வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், சென்னையில் உள்ள தெலுங்கு நடிகர் சோபன் பாபுவின் சிலையை அகற்றும் போராட்டம் நடைபெறும் என்று தமிழர் முன்னேற்ற படையின் நிறுவனர் கி.வீரலட்சுமி அறிவித்தார்.

சென்னை மேத்தா நகர், நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் இடத்தில் தெலுங்கு நடிகர் சோபன் பாபுவின் சிலை அவரது குடும்பத்தாரால் வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சென்னை மேத்தா நகர் நெல்சன் மாணிக்கம் சாலையில்உள்ள சோபன் பாபுவின் சிலை அருகே ஏராளமான பொலிசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழர் முன்னேற்ற படையின் நிறுவனர் கி.வீரலட்சுமி மற்றும் அவரது இயக்கத்தைச் சேர்ந்தவர்களை பொலிசார் கைது செய்தனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum