Top posting users this month
No user |
Similar topics
தக்காளி சாதம்{ எளிய முறை}
Page 1 of 1
தக்காளி சாதம்{ எளிய முறை}
தேவையான பொருட்கள்:
அரிசி – 1 கப்
துவரம் பருப்பு - ¼ கப்
தக்காளி – 4
இஞ்சி – சிறுதுண்டு
பச்சை மிளகாய் – 2
பெருங்காயம் – 1 சிட்டிகை
மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
நெய் – 2 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
கடுகு - ½ ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
கறிவேப்பிலை – சிறிதளவு
முந்திரி பருப்பு - 6
செய்முறை:
தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். இஞ்சியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.அரிசி, பருப்பு இரண்டையும் குக்கரில் போட்டு மூன்றரைக் கப் தண்ணீரைச் சேர்க்கவும்.
அத்துடன் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளி, மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து குக்கரை மூடி 1 விசில் வரும் வரை வேக விடவும்.சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து நன்றாக கிளறி விடவும்.
கடாயில் நெய் ஊற்றி கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், சீரகம், கறிவேப்பிலை, முந்திரி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வறுத்தி சாதத்தில் கொட்டிக் கிளறவும்.சுவையான தக்காளி சாதம் தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum