Top posting users this month
No user |
Similar topics
மங்குஸ்தான் பழம்
Page 1 of 1
மங்குஸ்தான் பழம்
மங்குஸ்தான் பழம் சிவப்பும், கருநீலமும் கலந்த வண்ணத்தில், உருண்டை வடிவில் பார்க்க அழகா கவும், சுவைக்க mangustanஇனிதாகவும் இருக்கும். உலகின் கிழக்கத்திய நாடுகளில் வெப்பமண்டல பகுதியில் மட்டும் விளையும் சிறப்புக்குரிய கனி.
20 அடி முதல் 60 அடி உயரம் வரை வளரக்கூடியது மங்குஸ்தான் மரம். ‘குளுசியாசியே’ தாவர குடும்பத்தை சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் கார்சினியா மங்குஸ்தானா.
வெப்பமண்டல பகுதிகளில் உள்ள மழைக்காடுகளில் அதிகமாக வளரும். இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் மிகுதியாக வளர்கிறது. இந்தியா மற்றும் இலங்கையிலும் விளைவிக்கப்படுகிறது. ஜூன் முதல் அக்டோபர் வரை மங்குஸ்தான் பழங்களின் ‘சீசன்’ ஆகும். மங்குஸ்தானில் பல வகைகள் உள்ளன.
மங்குஸ்தான் பழம், குறைந்த ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் சதைப்பற்றில் 63 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.
கொலஸ்டிரால் போன்ற கெட்ட கொழுப்புகள் மங்குஸ்தான் பழத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்துக்களை ஏராளமாக இருக்கிறது. 100 கிராம் பழத்தில் ஆர்.டி.ஏ. அளவில் 13 சதவீதம் நார்ப்பொருட்கள் அடங்கி உள்ளன.
எடை கூட விரும்புபவர்கள் மங்குஸ்தான் பழங்களை சாப்பிடலாம்
வைட்டமின் சி’ நிறைந்தது மங்குஸ்தான். 100 கிராம் பழத்தில் 12 சதவீதம் ஆர்.டி.ஏ. அளவில் ‘வைட்டமின் சி’ உள்ளது. நீரில் கரை யத்தக்க சிறந்த நோய் எதிர்ப்பு பொருள் ‘வைட்டமின் சி’.
அதிக அளவு ‘வைட்டமின் சி’ சத்துள்ள உணவுப் பொருட்களை உடலில் சேர்ப்பது புளூ காய்ச்சல் போன்ற நோய்த் தொற்றுகள் ஏற்படாமல் காக்கும். உடலுக்கு தீங்கு தரும் ஆக்சிஜன் பிரீ-ரேடிக்கல்களை விரட்டும் தன்மையும் ‘வைட்டமின் சி’க்கு உண்டு.
பி-குழும வைட்டமின்களான தயாமின், நியாசின், போலேட் போன்றவையும் கணிசமான அளவில், மங்குஸ்தானில் காணப்படுகிறது. கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு போன்றவற்றின் வளர்ச்சிதை மாற்றப் பணிகளில் இந்த வைட்டமின்கள் துணைக்காரணியாக உதவுகின்றன.
அதிக அளவில் தாமிரம், மாங்கனீசு, மக்னீசியம், பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் இதில் உள்ளது.
உடற் செல்கள் வளவளப்புத் தன்மையுடன் இருப்பதற்கும், இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கவும் பொட்டாசியம் தாது அவசியமானது. பக்கவாதம் மற்றும் இதயவியா திகள் ஏற்படாமலும் காக்கும் ஆற்றல் கொண்டது.
சாப்பிடும் முறை :
மேற்தோலை நீக்கிவிட்டு மங்குஸ் தான் பழங்களை அப்படியே சாப்பிடலாம்.
கோடை வெப்பம் தணிப்பதிலும், தாகம் தணிக்கவும் ஏற்றது மங்குஸ் தான் ஜூஸ்.
தேங்காய்ப்பால், மக்காச்சோள மாவு மற்றும் மங்குஸ்தான் பழத் துண்டுகள் சேர்த்து செய்யப்படும் ‘மங்குஸ்தான் கிளாபோட்டி’ சாப்பிட்ட பிறகு அருந்தும் பிரபல பானமாகும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum