Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஓம் எனும் பிரணவம்…

Go down

ஓம் எனும் பிரணவம்…           Empty ஓம் எனும் பிரணவம்…

Post by oviya Thu Apr 23, 2015 2:41 pm

ஓம் எனும் சொல்லில் எல்லாம் அடங்கியுள்ளது. வேதங்களின்hhhhh தலையாய மந்திரம், ஓம் எனும் பிரணவம் ஆகும். பிரணவத்தின் அதிபதி விநாயகன். இவரே மூலமுழுமுதற்பொருள்.

ஒருசமயம் பிரம்மாண்டத்தின் உண்மை உருவம் என்ன என்பதை அறியும் ஆவலில் சிவன் உமாதேவியை உற்றுப்பார்க்கவே பிரணவத்தின் அ என்ற ஒலியிலும் உமாதேவி உ என்ற ஒலியிலும் தம்மை ஒருநிலைப்படுத்திக்கொண்ட போது அ உ எனும் இரு ஒலிகளும் ஒன்றாகி யானை வடிவம் பெற்றுப் கஜானனன் ஆகியதாகக் புராணங்கள் கூறுகின்றன.

இன்னொரு வழிமுறையையும் புராணங்களில் குறிப்பிடுகின்றனர், உமாதேவியார் கணபதி உருவை மானசீகமாக மனதுக்குள் கற்பனை செய்து கொண்டார்.

பின் அவ்வுருவுக்கு உயிர் உருவம் கொடுக்க வேண்டி ஶ்ரீ மகாவிஸ்ணுவை வணங்கித்தவம் இருந்தார். அவரையே மகனாக வந்தருள வேண்டும் என்ற பார்வதிதேவியின் விருப்பத்திற்கு ஏற்ப விஸ்ணுவும் விநாயகனாக உருவெடுத்தார்.

அவரே வைணவர்கள் போற்றும் விஸ்வக்னேஸ்வர் என்றும் தும்பிக்கை ஆழ்வார் என்றும் போற்றப்படும் விநாயகர் ஆவார்.

பண்டைய காலம் முதல் இன்று வரையிலும் எந்த நூல் எழுதத்தொடங்க முன்பும் தாளின் தலைப்பில் ஓம் அல்லது உ என்ற பிள்ளையார் சுழி போட்டுத்தான் எழுதுவதை வழக்க மாகக் கொண்டுள்ளோம். எழுத்தறிவித்தவன் இறைவன் அல்லவா.

அந்த இறைவன் எம்மூலமுழுப் பரம் பொருள் ஏக தந்தன். ஆம் நால்வேதங்களைப் படைத்த பிரம்ம புத்திரரான வேதவியாசருக்கு வடமொழியிலிருந்து தமிழில் சுருக்கமாகவும் ,பொருள் விளக்கமாகவும் எமது மகாபாரதம் எனும் நூலை எழுதி பாமரரும் படித்து அறிந்து தர்மம் தழைக்க நினைத்தார். மனதில் எல்லாம் வல்ல விநாயகரை நினைத்தார்.

முதலில் நினைத்தால் முன்நிற்பவன் விக்கினம் வராதுகாப்பவன், விக்கினேஸ்வரன். அதனால் விநாயகர் வியாசர் முன் தோன்றினார். எண்ணம் நிறைவேற ஆசிர்வதிக்கிறேன். என்று விநாயகர் எழுத்தாணியும் ஏடும் கையுமாக உட்கார்ந்தார்.

வியாசரும் அவர் தாள்பணிந்து ஓம் கணேசாய நமஹ, என்று வணங்கினார். வியாசர் மகாபாரதத்தைச் சொல்லத்தொடங்கும் முன் ஏகதந்தன் ஒரு கட்டளை இட்டார்.

தொடங்கிவிட்டால் நிறுத்தாது சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும் என்றார். அதற்கு வியாசர் ஒத்துக் கொண்டு கதை சொல்லத் தொடங்கினார். விநாயகர் தமிழில் எழுதுகிறார்.

அவரது வேகத்திற்கு ஈடுகொடுக்கமாட்டாதவராய் கடினமானசொற்பதங்களை கூறி விநாயகர் பொருள்விளங்கி எழுதுவதற்குள் அடுத்த அடுத்த வரிகளைதயார் பண்ணிவிடுவாராம், வியாசபெருமான்.

விக்கினேஸ்வரப் பெருமானும் பரம்பொருளாயிற்றே, அவர் வேதவித்தகர். அவரின் வேகத்திற்கு எழுத்தாணியால் ஈடுகொடுக்க முடியாமல் உடைந்து விட்டது. ஒரு நல்லகாரியம் தடைப்படலாமோ,அது நல்லது அல்லவே.

விநாயகர் தனது ஒருகொம்பை முறித்து எழுத்தாணியாக்கி மிகுதி பாரதத்தை எழுதி முடித்தார். நம்மிடம் இருப்பதை அடுத்தவர்க்கு பயன் பட வேண்டும் எனும் நோக்கில் ஒற்றைக்கொம்பனாக ஏகதந்தனாக அவர் காட்சி கொடுப்பதில் இருந்து விநாயகர், எத்தகைய சிறப்பு வாய்ந்தவர் எனத்தெரிந்து கொள்ளலாம்.

இருக்கு யஜுர் சாம அதர்வண வேதங்கள் விநாயகரைப் பலவாறாகப் போற்றி வழிபடுகின்றன. ஶ்ரீகணேச யந்திர உபாசனை மூலம் அனைத்து மன விருப்பங்களையும் நிறைவேற்றிக்கொள்ளலாம். யந்திர சுத்திக்காகவும் விருப்பப் பிராப்திக்காகவும் மூன்று சிறப்பான மூலமந்திரங்கள் வகுத்தளிக்கப்படுகின்றன.

எந்த சுப மங்கள காரியங்களும் சிறப்புடன் நடைபெற இருக்கு வேதத்தின் கீழ்கண்ட மந்திரத்தை உச்சாடணம் செய்வர்.

“ஓம் கணா னாம் த்வா கணபதி ஹவாமஹே கவிம் கவீனாமுய ஸ்வரஸ்தம் ஜ்யேஸ்ட்ட ராஜம் ப்ருஹ்மணா, ப்ருமணஸ்பத ஆன ஸ்ரண்வன்னூதிபிஹி ஸீத ஸாதனம்”

இப்படிச்சொல்லும் வேதங்களில் கணங்களுக்கு எல்லாம் அதிபதியாக கணாதிபதி எனும் ஏரகச்செல்வனாக பிள்ளையார் விளங்குகிறார். அவருக்குரிய சிறப்பான மூலமந்திரங்கள்.

1 ஓம் கம் கணபதயே நமஹ.

2 ஓம் ஹ்ரீம் ஶ்ரீ க்லவ்ம் கம் கணபதயே வர வரத ஸர்வஜனம் மேம் வஸ்மானய ஸ்வாஹா,

3 ஓம் ஹ்ரீம் ஶ்ரீ க்லவ்ம் கம் கணபதயே வர வரத ஸர்வஜனம் மேம் வஸ்மானவ் ட்ட; ட்ட; இவ்வாறு கூறியே வழிபாடற்றுவர்.

ஆலயங்களிலும் முன் நுழைவு வாயிலில் விநாயர் சிலையைப் பிரதிஸ்டை செய்திருப்பார்கள், முதல்வணக்கம் முதல்வனாகிய கணபதிக்கே செலுத்துவது மரபு.

“ஓங்காரம் பிந்து சம்யுக்தம் நித்யம் ஜாயந்தியோகின காமதம் மோட்சதம் சைவ ஓங்காராய நமோ நமஹா” என்று ஓங்காரனான விக்கினேஸ்வரரை தியானித்து ஸோடச கணபதிகள்;பாலகணபதி ,தருணகணபதி ,பக்தகணபதி ,வீரகணபதி, சக்திகணபதி, த்வஜகணபதி சித்திகணபதி ,உச்சிஸ்டகணபதி ,விக்னகணபதி, க்ஷிப்ரகணபதி, ஹேரம்ப கணபதி, லக்ஷ்மிகணபதி, மகாகணபதி, விஜயகணபதி, நிருதகணபதி, உர்த்வகணபதி எனப்பதினாறு பெயர்களைக்கூறி அற்புதசக்தி வாய்ந்த இப்பெயர்களைத் தினமும் மனதில் நினைத்து விநாயகரை வணங்க மனவிருப்பம் எதுவாக இருந்தாலும் குறைவற நிறைவேறும் என்பது உறுதி, நம்பிக்கையோடு தும்பிக்கையானை நினைந்து நமது தலையில் மும்முறை குட்டி இரு காதுகளையும் கைகளால் மாறிப் பிடித்து அதாவது வலதுகாதை இடதுகையாலும் இடதுகாதை வலதுகையாலும் பிடித்துக்கொண்டு முழங்கால் மடியும் படி குனிந்து நிமிர்ந்து எழும்பி தோப்புக்கரணம் இட்டு அதன் பின்னார் தலைமேல் இருகைகளையும்கூப்பி வணங்குதல் வேண்டும். எக்காரியமும் தடையில்லாது நிறைவேறும். நன்றி.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum