Top posting users this month
No user |
பண்டாரகம பொலிஸ் உத்தியோகத்தர் கொலையுடன் மனைவிக்கு தொடர்பு என குற்றச்சாட்டு
Page 1 of 1

பண்டாரகம பொலிஸ் உத்தியோகத்தரின் கொலையுடன் மனைவிக்கு தொடர்பு இருப்பதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
பண்டாரகம பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் வழக்குப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஆர்.டபிள்யு. பலிஹவடன கடந்த 7ம் திகதி கொலை செய்யப்பட்டிருந்தார்.
வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். பத்து லட்ச ரூபா ஒப்பந்த அடிப்படையில் இந்தக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
வர்த்தகர் ஒருவருடன் இணைந்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவி இந்தக் கொலையை செய்துள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தர் வேறு ஓர் பெண்ணையும் அழைத்து வந்து வீட்டில் குடியமர்த்தியதாகவும் அவருக்கு உணவு சமைத்துக் கொடுக்குமாறு வற்புறுத்தியதாகவும் தமது சொத்துக்களை பலவந்தமாக அவரது பெயரில் எழுதிக் கொண்டதாகவும் பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவி விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சில பொலிஸ் குழுக்கள் கூட்டாக இணைந்து விசாரணை நடத்தியிருந்தனர். விரைவில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum