Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஜன்னல் சிவன்!

Go down

ஜன்னல் சிவன்!             Empty ஜன்னல் சிவன்!

Post by oviya Sat Apr 11, 2015 1:55 pm

கடலூர் அருகிலுள்ள நல்லாத்தூரில் சொர்ணபுரீஸ்வரர் கோயிலில், மூலவரை ஜன்னல் வழியாகத் தரிசிக்கிறார்கள்.
தல வரலாறு: திருநாவுக்கரசரால் வைப்புத்தலமாகப் பாடப்பட்ட தலம் நல்லாத்தூர். இங்கு சிவன், சொர்ணபுரீஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். அக்னி சக்தியுடன் விளங்கும் இவருக்கு எதிரில் கல் பலகணி (ஜன்னல்) உள்ளது. மூலவரை பலகணி வழியாக தரிசிக்க வேண்டும். அவர் அக்னி வடிவானவர். அவரிடம் இருந்து வெளிப்படும் ஆற்றலை பக்தர்கள் தாங்க இயலாது என்பதால், பலகணியை உருவாக்கியுள்ளனர். இது, அக்னி சக்தியை ஈர்த்து, பக்தர்களுக்கு தேவையான அளவு மட்டுமே வெளியிடும் சக்தி கொண்டது.
பலகணி வழியே மூலவரைத் தரிசிப்பவர்களுக்கு சூரிய மண்டலத்தில் வசிக்கும் யாக்ஞவல்க்யர், ரைவதர், பைரவர் ஆகிய மகரிஷிகள் தங்களின் தவசக்தியின் சிறு பகுதியையும் அளித்து ஆசி தருவதாக ஐதீகம்.
திரிபுர சுந்தரி: திரிபுரம் எனப்படும் மூன்று பறக்கும் கோட்டைகளை தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்ற அசுரர்கள், சிவனை நினைத்து தவம் செய்து பெற்றிருந்தனர். ஆனால், இந்தக் கோட்டைகளை நன்மைக்கு பயன்படுத்தாமல் விண்ணிலும், மண்ணிலும் அதிக நடமாட்டமுள்ள இடத்தில் இறக்கி விடுவார்கள். கோட்டையின் அடியில் சிக்குபவர்கள் இறந்து போவார்கள். தான் அளித்த கோட்டைகளை தவறான வழியில் பயன்படுத்திய அசுரர்களை சிவன் வதம் செய்தார். அப்போது அம்பாளும் உடன் சென்று சிவனுக்கு உதவினாள். இதனால் "திரிபுர சுந்தரி' என்று பெயர் பெற்றாள். அந்த அம்பாளே இந்தக் கோயிலில் காட்சியளிக்கிறாள். இவளும் சக்தி மிக்கவள் என்பதால், பாதத்தில் ஸ்ரீ சக்ர மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டு சக்தி அதில் தேக்கப்பட்டுள்ளது. இவளுக்கு அர்ச்சனை செய்து மஞ்சள், குங்குமம் தானம் செய்தால் செயல்பாடுகளில் தடை நீங்கும்.
பலாப்பழ தானம்: திரிதியை திதியும், மக நட்சத்திரமும் சேர்ந்த நாளில், பலா மரத்தடியில் பிறந்தவர் எமதர்ம ராஜா. இவர் சொர்ணபுரீஸ்வரருக்கு கட்டுப்பட்டவர். திரிதியை திதியன்று சொர்ணபுரீஸ்வரரை வழிபட்டு பலாப்பழ தானம் செய்தால் எமதர்ம ராஜா நம் அருகில் நெருங்க அஞ்சுவார். மார்க்கண்டேயருக்காக எமனை காலால் உதைத்த காலசம்ஹார மூர்த்தியும் இங்கு இருக்கிறார். 60,70 ,80 வயதை அடைந்தவர்கள் சிவனை தரிசித்து, சாந்தி ஹோமம் நடத்தினால் நோயற்ற வாழ்வு உண்டாகும்.
108 வெற்றிலை மாலை: வள்ளி, தெய்வானையுடன் ஆறுமுகநயினார் 12 கைகளுடன் மயிலில் அமர்ந்திருக்கிறார். சஷ்டியன்று முருகனுக்கு அபிஷேகம் செய்த பாலை, குழந்தை இல்லாதவர்கள் பருகினால், விரைவில் மழலை பாக்கியம் கிடைக்கும். நிலப்பிரச்னை தீர முருகனுக்கு 108 வெற்றிலை மாலை சூட்டி வழிபடுவது நன்மை தரும்.
கர்ண விதாயினி சரஸ்வதி: சிவன் ஆனந்த நடனம் ஆடிய போது தேவகணங்கள் ஒலித்த இசையை, ஏழு ஸ்வரங்களாக மாற்றியவள் கர்ண விதாயினி சரஸ்வதி. இவள் இங்குள்ள மகாமண்டப தூணில் சிற்பமாக இருக்கிறாள். சப்தமி, நவமி, தசமி, புதன்கிழமை, புனர்பூசம் நட்சத்திர நாட்களில் கல்கண்டு படைத்து இவளை வழிபட்டால் இசை ஆற்றல் பெருகும். இங்குள்ள சுந்தரமூர்த்தி விநாயகர் சுந்தரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். கோயிலை நிர்மாணித்த சங்கு, சாயிமுனிவர்களின் திருவுருவமும் உள்ளது.
காணிக்கை மணி: கடலூரில் ஆங்கிலேய கலெக்டராக இருந்தவர் பகோடா. இவரது மகளுக்கு பார்வை இல்லை. சொர்ணபுரீஸ்வரரை வழிபட்டதால் பார்வை கிடைக்கப் பெற்றாள். மகிழ்ந்த கலெக்டர், 1907ல், சொர்ணபுரீஸ்வரர் கோயிலுக்கு நஞ்சை நிலம் தானம் அளித்ததோடு, இங்கிலாந்தில் செய்த மணி ஒன்றையும் கொடுத்தார். 3 கி.மீ., தூரம் வரை ஓசை கேட்கும் இந்த மணி இன்றும் பயன்பாட்டில் உள்ளது.
இருப்பிடம்: புதுச்சேரி-கடலூர் ரோட்டில்உள்ள தவளகுப்பத்தில் இருந்து 8 கி.மீ.,
திறக்கும் நேரம்: காலை 7 - 11.30, மாலை 6 - 8.30 .
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum