Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இந்த வாரம் உங்களுக்கு இதுதான் நடக்கும்

Go down

இந்த வாரம் உங்களுக்கு இதுதான் நடக்கும் Empty இந்த வாரம் உங்களுக்கு இதுதான் நடக்கும்

Post by oviya Mon Apr 06, 2015 2:42 pm

அன்பார்ந்த ராசி நேயர்களே இதோ உங்களுக்கான ராசி பலன்கள்,
மேஷம்

உங்கள் ராசி அதிபதி செவ்வாய் சுக்கிரனுடன் கூடி ஜன்ம ராசியிலேயே இருப்பதால் திட, வீர, பராக்கிரமம் வெளிப்படும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும்.

கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். மக்களால் அனுகூலம் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புட்ன் செய்யும் வர்த்தகம் லாபம் தரும்.

புதியவர்கள் அறிமுகமாகி, உங்களுக்கு உதவுவார்கள். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டுத் தொழிலில் வளர்ச்சி காணலாம். வாரப் பின்பகுதியில் சந்திரன் சனியுடன் கூடி 8-ல் உலவும் நிலை அமைவதால் மன அமைதி குறையும்.

உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். கெட்டவர்களின் தொடர்புக்கு இடம் தரலாகாது. வீண் விவகாரங்களில் ஈடுபடலாகாது.

நேரான பாதையில் செல்வதன் மூலம் பிரச்னைகளுக்கு ஆளாகாமல் தப்பலாம். வேலையாட்களால் சங்கடங்கள் சூழும்.

ரிஷபம்

உங்கள் ராசிக்கு 3-ல் வக்கிர குருவும், 11-ல் சூரியனும் புதனும்,கேதுவும் 12-ல் சுக்கிரனும் உலவுவதால் புதிய சொத்துக்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும். அரசுப் பணிகள் ஆக்கம் தரும்.

நிர்வாகத்திறமை வெளிப்படும். சுகம் கூடும். அரசியல்வாதிகளுக்கும் அரசுப்பணியாளர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். நவீன விஞ்ஞானத்துறைகள் லாபம் தரும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும்.

வாழ்க்கை வசதிகள் பெருகும். அயல்நாட்டுத் தொடர்பு ஓரளவு பயன்படும். மக்களால் சிறுசிறு பிரச்னைகள் சூழும். உத்தியோகஸ்தர்களும் ஆசிரியர்களும் பொறுப்புடன் காரியமாற்றுவது நல்லது. பொருள் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. வீண் சண்டை, சச்சரவுகளைத் தவிர்க்கவும்.

கணவன் மனைவி இடையே சண்டை, சச்சரவுகள் ஏற்படும். விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. 6-ஆம் திகதி முதல் சுக்கிரன் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். புதிய பொருட்சேர்க்கை நிக்ழும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும்.

மிதுனம்

உங்கள் ராசிக்கு 2-ல் வக்கிர குருவும், 6-ல் சனியும், 10-ல் சூரியனும் புதனும் கேதுவும் 11-ல் செவ்வாயும் சுக்கிரனும் உலவுவதால் நல்ல தகவல் வந்து சேரும்.

தந்தையால் அனுகூலம் உண்டாகும். அரசியல், நிர்வாகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள். அரசுப்பணியாளர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள்.

வியாபாரம் பெருகும். கலைத்துறையினருக்கு சுபிட்சம் கூடும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். பொறியாளர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். தொழிலாளர்களுக்கும் உத்தியோகஸ்தர்களுக்கும் அனுகூலமான போக்கு தென்படும்.

ஆசிரியர்கள் போற்றப்படுவார்கள். பெண்களுக்கு மன உற்சாகம் கூடும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். வழக்கில் வெற்றி கிடைக்கும். பிரச்னைகள் எளிதில் தீரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும்.

கடகம்

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 10-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பாகும். குடும்ப நலம் சீராகும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். புதியவர்களது தொடர்பு பயன்படும்.

நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். இய்ந்திரப்பணிகள் லாபம் தரும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். மக்களால் சிறு சங்கடம் உண்டாகும்.

6-ஆம் திகதி முதல் சுக்கிரன் 11-ஆமிடம் மாறுவதால் சினிமா, நாடகம், நாட்டியம், சங்கீதம் போன்ற கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். பொருளாதார நிலையில் அபிவிருத்தி காண வழிபிறக்கும்.

ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்களின் சேர்க்கை நிகழும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை உருவாகும். சுக்கிரனை வக்கிர சனி பார்ப்பதால் சில இடர்ப்பாடுகளும் ஏற்படும்.

8-ஆம் திகதி முதல் குரு வக்கிர நிவர்த்தி பெறுவதால் புனிதமான காரியங்களில் பங்கு கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டுத் தொழிலில் அபிவிருத்தி காணலாம்.

சிம்மம்

உங்கள் ராசி அதிபதி சூரியன் 8-ல் கேதுவுடன் உலவுவது சிறப்பாகாது. சனி, ராகு ஆகியோரது சஞ்சாரமும் சிறப்பாக இல்லாததால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

உஷ்ணாதிக்கம் அதிகரிக்கும். கண், மறைமுக உறுப்புக்கள் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். அரசியல், நிர்வாகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. அலைச்சல் அதிகமாகும்.

பெற்றோர் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். குடும்பத்தில் சலசலப்பு உண்டாகும். 9-ல் செவ்வாயும் சுக்கிரனும் கூடியிருப்பதால் தெய்வப் பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபாடு கூடும். அதனால் மனத்தில் தெளிவும் தன்னம்பிக்கையும் உண்டாகும்.

6-ஆம் திகதி முதல் சுக்கிரன் 10-ஆமிடம் மாறினாலும் செய்தொழிலில் வளர்ச்சி காணலாம். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். சனி 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் எடுத்த காரியங்களில் சிறு தாமதம் ஏற்பட்டு விலகும்.

பிற மொழி, மத, இனக்காரர்களிடம் எச்சரிக்கை தேவை. நண்பர்கள், உறவினர்களால் பிரச்னைகள் சூழும். சுமுகமாகப் பழகவும்.

கன்னி

உங்கள் ராசிக்கு 3-ல் சனியும், 8-ல் சுக்கிரனும் 11-ல் குருவும் உலவுவதால் அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கான பயன் கிடைத்துவரும். பொதுப் பணிகளில் ஈடுபாடு கூடும்.

உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். வார முன்பகுதியில் செலவுகளும் வாரப் பின்பகுதியில் பண வரவும் உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும்.

விருந்து, உபசாரங்களில் கலந்து கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். கலைஞர்களது நிலை உயரும். 7-ல் சூரியனும் புதனும் கேதுவும் இருப்பதால் பிறரிடம் கோபப்படாமல் நிதானமாகப் பேசிப் பழகுவது நல்லது.

செவ்வாய் 8-ல் இருப்பதால் எக்காரியத்திலும் வேகம் கூடாது. 6-ஆம் திகதி முதல் சுக்கிரன் 9-ஆமிடம் மாறுவதாலும் 8-ஆம் திகதி முதல் குரு வக்கிர நிவர்த்திப் பெற்று, நேர்கதியில் 11-ஆமிடத்தில் உலவுவதாலும் வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.

சுபிட்சம் கூடும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். மன மகிழ்ச்சி கூடும். நல்ல தகவல் வந்து சேரும். முக்கியமான எண்ணங்கள் இனிது நிறைவேறும்.

துலாம்

உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும் புதனும் கேதுவும் 10-ல் வக்கிர குருவும் உலவுவதால் எதிர்ப்புக்களைக் கடந்து வாழ்வில் வெற்றி பெறுவீர்கள். அரசு உதவி கிடைக்கும். தந்தையால் அனுகூலம் உண்டாகும்.

முக்கியஸ்தர்களின் சந்திப்பு நிகழும். அதனால் நலம் ஏற்படும். எலெக்ட்ரானிக், கணனி இனங்கள் லாபம் தரும். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். முக்கியப் பதவிகளும் பட்டங்களும் சிலருக்கு இப்போது கிடைக்கும்.

நிறுவன, நிர்வாகத்துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்னேற்றமான பாதை தெரியவரும். 6-ஆம் திகதி முதல் சுக்கிரன் 8-ஆமிடம் மாறுவதால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். கலைஞர்களுக்கு மந்தநிலை விலகி, உற்சாகமான சூழ்நிலை உருவாகும்.

மாதர்களது எண்ணம் ஈடேற வழிபிறக்கும். 8-ஆம் திகதி முதல் குரு வக்கிர நிவர்த்தி பெறுவதால் உத்தியோகஸ்தர்களுக்கு சிறுசிறு பிரச்னைகள் சூழும். மக்கள் நலனில் கவனம் தேவை. பொருள் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புடன் ஈடுபடவும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்

உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6-ல், தன் சொந்த வீட்டில் உலவுவதாலும் குரு, ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதாலும் வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.

மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். எதிரிகள் அடங்குவார்கள். எடுத்த காரியத்தில் திறம்பட ஈடுபடுவீர்கள். இயந்திரப்பணிகள் லாபம் தரும். வேற்று மொழி, மத, இனக்காரர்களது தொடர்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும்.

பண வரவு அதிகமாகும். திடீர்ப் பொருள்வரவுக்கும் இடமுண்டு. பயணத்தின் மூலம் முக்கியமான எண்ணம் ஈடேறும். வாரப் பின்பகுதியில் செலவுகள் கூடும்.

அலைச்சலும் உழைப்பும் அதிகமாகும். 6-ஆம் திகதி முதல் சுக்கிரன் 7-ஆமிடம் மாறி, சனியின் பார்வையைப் பெறுவது சிறப்பாகாது. கணவன் மனைவி உறவு நிலை பாதிக்கும்.

8-ஆம் திகதி முதல் குரு வக்கிர நிவர்த்தி பெற்று, நேர்கதியில் 9-ஆமிடத்தில் உலவத் தொடங்குவதால் தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும், மக்கள் நலம் சீராகும்.

தனுசு

உங்கள் ராசிக்கு 4-ல் புதனும் 5-ல் செவ்வாயும் சுக்கிரனும், 10-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும்.

புதியவர்களது சந்திப்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். பயணத்தால் நலம் ஏற்படும். மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். திடீர்ப் பொருள் வரவு உண்டாகும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகள் ஆக்கம் தரும்.

நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் அனுகூலமான போக்கு தென்படும். 6-ஆம் திகதி முதல் சுக்கிரன் 6ஆமிடம் மாறுவதால் பெண்களாலும் வாழ்க்கைத்துணைவராலும் பிரச்னைகள் சூழும். 8-ஆம் தேதி முதல் குரு வக்கிர நிவர்த்தி பெறுவதால் மக்கள் நலனில் கவனம் தேவைப்படும்.

பொருளாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. பெரியவர்களிடம் பணிவோடு நடந்து கொள்வது அவசியமாகும். தொழில் அதிபர்கள் எதிலும் அதிகம் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம்.

மகரம்

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும் கேதுவும் 4-ல் செவ்வாயும் சுக்கிரனும் 7-ல் குருவும் 11-ல் சனியும் உலவுவதால் புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும்.

பக்தி மார்க்கத்திலும் ஞான மார்க்கத்திலும் தெளிவு பிறக்கும். நண்பர்களும் உறவினர்களும் ஓரளவு உதவுவார்கள். சொத்துக்களும் புதிய பொருட்களும் சேரும். பண வரவு அதிகரிக்கும்.

தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். 6-அம் திகதி முதல் சுக்கிரன் 5-ஆமிடம் மாறுவதால் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடும். மக்களால் அனுகூலம் உண்டாகும். பெண்களாலும் வாழ்க்கைத்துணைவியாலும் நலம் ஏற்படும்.

8-ஆம் திகதி முதல் குரு வக்கிர நிவர்த்தி பெறுவதால் சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கனிந்து வரும். கூட்டுத் தொழில் லாபம் தரும். பண நடமாட்டம் திருப்தி தரும்.

கும்பம்

உங்கள் ராசிநாதன் சனி 10-ல் உலவுவது சிறப்பாகும். 2-ல் புதனும் 3-ல் உலவும் செவ்வாயும் சுக்கிரனும் நலம் புரிவார்கள். குரு 6-ல் இருந்தாலும் வக்கிரமாக இருப்பதால் அனுகூலம் உண்டாகும்.

சந்திரன் வார ஆரம்பத்தில் 8-ல் ராகுவுடன் உலவுவது சிறப்பாகாது. பயணத்தால் சிறு சங்கடம் ஏற்படும். விஷத்தாலும் விஷ ஜந்துக்களாலும் பாதிக்கப்பட நேரலாம். உடல் நலனில் கவனம் தேவை.

5-ஆம் திகதி பிற்பகலிலிருந்து நல்ல திருப்பம் உண்டாகும். முன்னேற்றத்துக்கான நல்ல தகவல் வந்து சேரும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைக்கும்.

பொதுப்பணிகளில் ஈடுபாடு கூடும். வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்பு வாரப்பின்பகுதியில் கிடைக்கும். கலைஞர்கள், இயந்திரப்பணியாளர்கள், மாதர்கள், வியாபாரிகள் ஆகியோருக்கெல்லாம் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும்.

நிலபுலங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைத்துவரும். 6-ஆம்தேதி முதல் சுக்கிரன் 4-ஆமிடம் மாறுவது சிறப்பாகும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். மன உற்சாகம் பெருகும்.

8-ஆம் திகதி முதல் குரு வக்கிர நிவர்த்தி பெற்று 6-ஆமிடத்தில் உலவும் நிலை அமைவதால் பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை. மக்கள் நலனில் அக்கறை தேவைப்படும்.

மீனம்

உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாயும் சுக்கிரனும் 5-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். பொருள் வரவு கூடும் நேரமிது. காரியத்தில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும்.

நல்லவர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள்.

ஜன்ம ராசியில் சூரியன், புதன், கேது ஆகியோர் உலவுவதால் தலை, கண் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். 7-ல் ராகு இருப்பதால் பிறரிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது.

6-ஆம், திகதி முதல் சுக்கிரன் 3-ஆமிடம் மாறுவதால் உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். 8-ஆம் தேதி முதல் குரு வக்கிர நிவர்த்தி பெற்று நேர்கதியில் 5-ல் உலவுவதால் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும்.

மக்கள் நலம் சீராகும். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். பெரியவர்களும் தனவந்தர்களும் உங்களுக்கு உதவி புரிவார்கள்.

தெய்வப் பணிகள் நிறைவேறும். பரம்பரையாகச் செய்து வரும் தொழில் விருத்தி அடையும். ஜலப்பொருட்கள் லாபம் தரும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum