Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இந்த வாரம் உங்களுக்கு இது தான் நடக்கும்!

Go down

இந்த வாரம் உங்களுக்கு இது தான் நடக்கும்! Empty இந்த வாரம் உங்களுக்கு இது தான் நடக்கும்!

Post by oviya Mon Mar 09, 2015 1:14 pm

ராசி நேயர்களே இந்த வாரம் உங்களுக்கு நடக்கவிருப்பதும், கிடைக்கவிருப்பதும் இதோ,
மேஷம்

உங்கள் ராசிக்கு சூரியன், புதன், சுக்கிரன், ராகு ஆகியோர் அனுகூலமான நிலையில் உலவுவதால் முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். மக்களால் அனுகூலம் உண்டாகும்.

அரசுப்பணிகள் ஆக்கம் தரும். அரசியல்வாதிகளுக்கும் அரசுப்பணியாளர்களுக்கும் செழிப்புக் கூடும். மேலதிகாரிகள், முக்கியஸ்தர்களது சந்திப்புப் பயன்படும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம்.

எழுத்து, பத்திரிகை போன்ற இனங்களைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். புதிய பொறுப்புக்களும் பதவிகளும் கிடைக்கும். பயணத்தால் நலம் உண்டாகும். பிற மொழி, மத, இனங்களைச் சேர்ந்தவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.

கணவன் மனைவி உறவு நிலை சீராக இருந்துவரும். கூட்டுத் தொழில் லாபம் தரும். உழைப்புக்குப் பின்வாங்காமல் கடுமையாகப் பாடுபடுபவர்களுக்கு விசேடமான நன்மைகள் ஏற்படும். சோர்வு கூடாது.

வீண் செலவுகளைத் தவிர்ப்பதும் அவசியமாகும். குறுக்கு வழிகளில் செல்லவேண்டாம்.

ரிஷபம்

உங்கள் ராசிக்கு 10-ல் சூரியனும் 11-ல் செவ்வாயும், சுக்கிரனும் கேதுவும் உலவுவது சிறப்பாகும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும்.

வீட்டையும், வாகனத்தையும் பழுது பார்த்துக் கொள்ளவும் சந்தர்ப்பம் கூடிவரும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். பெரியவர்களது சந்திப்பு நிகழும். அதனால் அனுகூலமும் உண்டாகும். செந்நிறப் பொருட்கள் லாபம் தரும்.

கலைத்துறையினருக்கு வெற்றிவாய்ப்புக்கள் கூடும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். 5-ல் ராகு இருப்பதால் மக்களால் சில இடர்ப்பாடுகள் ஏற்பட்டு விலகும்.

9-ஆம் திகதி முதல் புதன் கும்ப ராசிக்கு இடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். மாணவர்களது நிலை உயரும். சொந்தத் தொழிலில் அபிவிருத்தி காணலாம். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு அதிகரிக்கும்.

12-ஆம் திகதி முதல் சுக்கிரன் 12-ஆமிடம் மாறுவதால் சுப விரயம் ஆகும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சுகம் பெருகும். ஓய்வும் எடுப்பீர்கள். எதிரிகள் விலகிப் போவார்கள்.

மிதுனம்

உங்கள் ராசிக்கு 2-ல் வக்கிர குருவும், 6-ல் சனியும், 8-ல் புதனும் 10-ல் செவ்வாயும் கேதுவும் உலவுவதால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். நல்ல தகவல் வந்து சேரும். மனத்துணிவும் தன்னம்பிக்கையும் அதிகமாகும்.

எடுத்த காரியங்களில் திறம்பட ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். இயந்திரப்பணிகள் லாபம் தரும். இன் ஜினீயர்களது நிலை உயரும். பொருள் வரவு கூடும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் நிகழும். வியாபாரம், உத்தியோகம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு அனுகூலமான போக்கு நிலவிவரும்.

ஆன்மிகவாதிகள் மதிப்பு உயரப் பெறுவார்கள். புதிய பொருட்களும் சொத்துக்களும் சேரும். 9-ஆம் திகதி முதல் தொலைதூரத் தொடர்பால் அனுகூலம் உண்டாகும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். 12-ஆம் தேதி முதல் மக்கள் நலம் சீராகும்.

மக்களால் ஓரிரு எண்ணங்களும் ஈடேறும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். திறமை வீண்போகாது. 4-ல் ராகு இருப்பதால் அலைச்சல் சற்று கூடும். தாய் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும்.

கடகம்

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 9-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். குடும்பத்தில் அமைதி காணலாம். பண வரவு சற்று அதிகரிக்கும். பேச்சில் திறமை வெளிப்படும். பிற மொழி, மத, இனங்களைச் சேர்ந்தவர்களால் அனுகூலம் ஏற்படும்.

பயணம் பயன்படும். சொத்துக்களும் புதிய ஆடை, அணிமணிகளும் அலங்காரப் பொருட்களும் சேரும்.

போக்குவரத்து இனங்கள் லாபம் தரும். வெளிநாட்டவரால் அனுகூலம் உண்டாகும். பயண விடுதி, பயண ஏற்பாடு மற்றும் பயணம் சம்பந்தமான இனங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண வாய்ப்பு உண்டாகும்.

9-ஆம் திகதி முதல் புதன் பலம் பெறுவதால் வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். மாணவர்களது நிலை உயரும். எழுத்து, பத்திரிகை போன்ற இனங்கள் ஆக்கம் தரும்.

12-ஆம் திகதி முதல் சுக்கிரன் 10-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. தொழில் சம்பந்தமான சில இடர்ப்பாடுகள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிக்கவும். இடமாற்றம் சிலருக்கு உண்டாகும்.

சிம்மம்

உங்கள் ராசிக்கு 6-ல் புதனும் 8-ல் சுக்கிரனும் 12-ல் வக்கிர குருவும் உலவுவது சிறப்பாகும். ம்திப்பும் அந்தஸ்தும் உயரும். உடல் நலம் சீராகவே இருந்துவரும். பெரியவர்களும் தனவந்தர்களும் உங்களுக்கு உதவுவார்கள்.

வியாபாரம் பெருகும். கலைத்துறை ஊக்கம் தரும். பண நடமாட்டம் அதிகரிக்கும். எழுத்து, பத்திரிகை, கணிதம், விஞ்ஞானம் போன்ற துறைகளைச் சேர்ந்டஹ்வர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும்.

இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் வீண்வம்பு வேண்டாம். நண்பர்கள் உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படும்.

பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. இயந்திரப்பணியாளர்கள், இன் ஜினீயர்கள் ஆகியோருக்கெல்லாம் முன்னேற்றம் தடைப்படுவதுடன் சங்கடங்களும் உண்டாகும்.

எக்காரியத்திலும் யோசித்து, நிதானமாக ஈடுபடுவது நல்லது. பயணத்தின்போது பாதுகாப்புத் தேவை. விளையாட்டு விநோதங்களின்போதும் எச்சரிக்கை அவசியம் தேவை. உடன்பிறந்தவர்களால் மன அமைதி குறையும். வீண் சண்டை, சச்சரவுகளைத் தவிர்ப்பது நல்லது.

கன்னி

உங்கள் ராசிக்கு 3-ல் சனியும், 6-ல் சூரியனும் 11-ல் குருவும் உலவுவதால் திறமைக்கும் உழைப்புக்கும் உரிய பயனைப் பெற்று வருவீர்கள். பண நடமாட்டம் அதிகரிக்கவே செய்யும். திடீர் அதிர்ஷ்டவாய்ப்புக்களும் கூடிவரும்.

சமுதாய நல முன்னேற்றப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு வரவேற்பு கூடும்.

அரசியல்வாதிகள், அரசுப்பணியாளர்கள், நிர்வாகத்துறைகளைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கெல்லாம் வெற்றிகள் குவியும். சொத்துக்களால் ஆதாயம் கிடைத்துவரும்.

தொழிலாளர்கள், விவசாயிகள், உத்தியோகச்தர்கள், ஆன்மிகவாதிகள், ஆசிரியர்கள் ஆகியோருக்கெல்லாம். உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். ஜன்ம ராசியில் ராகுவும், 7-ல் செவ்வாயும் கேதுவும் சுக்கிரனும் உலவுவதால் அலைச்சல் அதிகரிக்கும்.

கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பிறரிடம் கோபப்படாமல் நிதானமாகப் பேசிப் பழகுவதன் மூலம் அவர்களது அதிருப்திக்கு ஆளாகாமல் தப்பலாம்.

துலாம்

உங்கள் ராசிக்கு 4-ல் புதனும் 6-ல் செவ்வாயும் கேதுவும் 10-ல் வக்கிர குருவும் உலவுவதால் பொருளாதார நிலை உயரும். பெற்றோரால் அனுகூலம் உண்டாகும்.

ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். வியாபாரத்தில் வளர்ச்சி காணச் சந்தர்ப்பம் உருவாகும். மாணவர்களது திறமை வெளிப்படும். எதிரிகள் அடங்குவார்கள்.

வழக்கு, போட்டிப் பந்தயங்களிலும் வெற்றி காணலாம். இயந்திரப்பணிகள் லாபம் தரும். இன்ஜினீயர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். 6-ல் சுக்கிரன் உலவுவதால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

சகிப்புத் தன்மை தேவை. கலைஞர்கள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. 12-ல் ராகு இருப்பதால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிக்கன நடவடிக்கை தேவை.

வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். பயணத்தின்போது பாதுகாப்புத் தேவை. வாகனங்கள், போக்கு வரத்து இனங்கள், ஆகியவற்றால் பராமரிப்புச் செலவுகள் கூடுவதுடன் சிறு விபத்துக்கும் ஆளாக நேரலாம்; கவனம் தேவை.

விருச்சிகம்

உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும், 9-ல் குருவும், 11-ல் ராகுவும் உலவுவதால் தொழில் ரீதியாக ஓரிரு நன்மைகள் உண்டாகும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். மகப்பேறு பாக்கியமும் சிலருக்கு உண்டாகும். மந்திர, தந்திர, யந்திர சாஸ்திரங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள்.

பயணத்தால் முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். அயல்நாட்டுத் தொடர்புடன் தொழில் புரிபவர்கள் ஏற்றம் பெறுவார்கள். இடமாற்றமும், நிலைமாற்றமும் நல்லவிதமாக அமையும். பொருளாதார நிலை உயரும்.

ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். முயற்சியும் உழைப்பும் வீண்போகாது.

9-ஆம் திகதி முதல் புதன் 4-ஆமிடம் மாறுவதால் மாணவர்களது நோக்கம் நிறைவேறும். வியாபாரம் சூடு பிடிக்கும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் முன்னேற்றமான பாதை புலப்படும்.

12-ஆம் திகதி முதல் சுக்கிரன் 6-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. வாழ்க்கைத்துணை நலனில் கவனம் தேவைப்படும். கூட்டாளிகளிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது.

பெண்களால் பிரச்சனைகள் சூழும், எச்சரிக்கை தேவை.

தனுசு

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் 3-ல் சூரியனும் 4-ல் சுக்கிரனும், 10-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். பேச்சில் திறமை கூடும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும்.

அரசு உதவி பெற வாய்ப்பு உண்டாகும். அரசியல்வாதிகளுக்கும் அரசுப்பணியாளர்களுக்கும் நிர்வாகத்துறையினருக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும்.

வியாபாரம்பெருகும். எழுத்து, பத்திரிகை போன்ற இனங்களைச் சேர்ந்தவர்களுக்கு வளர்ச்சி தெரியவரும். தந்தையாலும், உற்றார், உறவினர்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் அனுகூலம் ஏற்படும்.

பயணத்தால் ஒரு காரியம் நிறைவேறும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். புதியவர்கள் உங்களுக்கு அறிமுகம் ஆவார்கள். அவர்களால் அனுகூலமும் உண்டாகும்.

ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்களில் ஈடுபடவும் அதனால் ஆதாயம் பெறவும் வாய்ப்பு உண்டாகும். 4-ல் செவ்வாயும் கேதுவும் 12-ல் சனியும் இருப்பதால் அலைச்சலும் உழைப்பும் அதிகரிக்கும். செலவுகள் கூடும்.

சிக்கன நடவடிக்கை அவசியம் தேவை. தாய் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். 9-ஆம் திகதி முதல் புதன் 3-ஆமிடம் மாறுவதால் செய்து வரும் தொழிலில் அதிக அக்கறை தேவை.

12-ஆம் திகதி முதல் சுக்கிரன் 5-ஆமிடம் மாறுவதால் ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். பெண்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் நலம் ஏற்படும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும்.

மகரம்

உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும் செவ்வாயும் கேதுவும் 7-ல் குருவும் 11-ல் சனியும் உலவுவதால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். நல்லவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

கலைத்துரையினருக்கு வெற்றிகள் குவியும். மாதர்களது எண்ணம் ஈடேறும். பல வழிகளில் வருவாய் வந்து சேரும். எதிர்ப்புக்கள் விலகும். போட்டி, பந்தயம், வழக்கு, வியாஜ்ஜியம், விளையாட்டு ஆகியவற்றில் வெற்றி கிடைக்கும்.

கூட்டுத் தொழில் லாபம் தரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். உடன்பிறந்தவர்கள் ஓரளவு உதவுவார்கள்.

வாரப் பின்பகுதியில் முக்கியமான எண்ணங்கள் ஈடேற வழிபிறக்கும். 9-ஆம் தேதி முதல் புதன் 2-ஆமிடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். மாணவர்களது நிலை உயரும்.

12-ஆம் திகதி முதல் சுக்கிரன் 4-ஆமிடம் மாறுவதால் சுகானுபவம் உண்டாகும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள்.

தாயாராலும்தாய் வழி உறவினராலும் அதிகம் நலம் உண்டாகும். பொதுப் பணியாளர்கள் புகழும் பொருளும் பெறுவார்கள்.

கும்பம்

உங்கள் ராசிக்கு 2-ஆம் இடத்தில் சுக்கிரனும் 10-ல் சனியும் உலவுவது சிறப்பாகும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயனைப் பெற்று வருவீர்கள்.

தொழிலாளர்களது கோரிக்கைகளில் சில இப்போது நிறைவேறும். இஉம்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்கள் லாபம் தரும்.

கலைஞர்களுக்கு வர்வேற்பு கூடும். மாதர்களது நிலை உயரும். தொழில் முன்னேற்றத் திட்டங்களுக்காகச் செலவு செய்ய நேரும். ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள், ஆகியவற்றின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைத்துவரும். 2-ல் செவ்வாய், கேது ஆகியோரும், 8-ல் ராகுவும் உலவுவதால் குடும்ப நலனில் அக்கறை தேவை. வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும்.

கெட்ட எண்ணங்களுக்கு இடம் தரலாகாது. பேச்சில் நிதானம் அவசியம் தேவை. பயணத்தின்போது விழிப்புடன் இருப்பது நல்லது. புதியவர்களிடம் எச்சரிக்கையுடன் பழகவும். வாரப் பின்பகுதியில் நற்பணிகளில் ஈடுபடச் சந்தர்ப்பம் கூடிவரும். முக்கியமான ஓரிரு காரியங்கள் நிறைவேறும்.

மீனம்

உங்கள் ராசியில் சுக்கிரனும் 5-ல் குருவும், 11-ல் புதனும் உலவுவது சிறப்பாகும். நல்லவர்களது நட்புறவால் நலம் பெறுவீர்கள். நல்லவர் அல்லாதவர்களது தொடர்பு அடியோடு கூடாது.

கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காணலாம். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும்.

தனவந்தர் சகாயம் கிடைக்கும். எதிரிகள் இருப்பார்கள் என்றாலும் சமாளித்து வருவீர்கள். ஜன்ம ராசியில் செவ்வாயும் கேதுவும் இருப்பதால் எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபடுவது நல்லது.

9-ல் சனியும், 12-ல் சூரியனும் இருப்பதால் தந்தை நலனில் கவனம் தேவை. அரசாங்கத்தாரால் சங்கடம் உண்டாகும். அரசுப்பணியாளர்களும் அரசியல்வாதிகளும் பொறுப்புணர்ந்து கடமையாற்றினால் சங்கடங்களுக்கும் சரிவுக்கும் ஆளாகாமல் தப்பலாம்.

மருத்துவச் செலவுகள் சற்று அதிகமாகும். கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. 9-ஆம் திகதி முதல் புதன் 12-ஆமிடம் மாருவதால் வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது.

12-ஆம் திகதி முதல் சுக்கிரன் 2-ஆமிடம் மாறுவதால் குடும்ப நலம் சிறக்கும். பண வரவு அதிகமாகும். பெண்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் நலம் உண்டாகும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum