Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இந்த வாரம் உங்களுக்கு நடக்கவிருப்பவை இதோ!

Go down

இந்த வாரம் உங்களுக்கு நடக்கவிருப்பவை இதோ! Empty இந்த வாரம் உங்களுக்கு நடக்கவிருப்பவை இதோ!

Post by oviya Mon Feb 09, 2015 3:00 pm

அன்பார்ந்த ராசி நேயர்களே, உங்களுக்கான இந்த வார ராசி பலன்கள்
மேஷம்

உங்கள் ராசிக்கு 6-ல் ராகுவும், 10-ல் சூரியன், புதன் ஆகியோரும், 11-ல் செவ்வாயும் சுக்கிரனும் உலவுவது விசேடமாகும். மனத்துக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைக்கும்.

இயந்திரப்பணிகள் லாபம் தரும். எதிரிகள் விலகிப் போவார்கள். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். புதியவர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள்.

அரசாங்கத்தாரால் எதிர்பார்த்திருந்த காரியம் இப்போது நிறைவேறும். எலெக்ட் ரானிக், கணனி போன்ற நவீன விஞ்ஞானத்துறைகள் லாபம் தரும். மருத்துவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். உயர் பதவிகளும் பொறுப்புகளும் தேடிவரும்.

வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். மாணவர்களது நிலை உயரும். கணவன் மனைவி இடையே கருத்து ஒற்றுமை கூடும். கூட்டுத் தொழில் லாபம் தரும்.

நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு அனுகூலமான போக்கு தென்படும். 12ம் திகதி முதல் செவ்வாய் 12-ஆமிடம் மாறுவதால் வீண் செலவுகள் கூடும். இடமாற்றமும் நிலைமாற்றமும் உண்டாகும்.

உடன்பிறந்தவர்களின் நலனில் கவனம் தேவைப்படும். செவ்வாயையும் கேதுவையும் குரு பார்க்கும் நிலை அமைவதால் தெய்வப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.

ரிஷபம்

உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாயும், 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். குரு 3-ல் இருந்தாலும் வக்கிரமாக இருப்பதால் ஓரளவு நலம் புரிவார். நண்பர்கள், உறவினர்களது சந்திப்பு பயன்படும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும்.

இயந்திரப்பணிகள் லாபம் தரும். இஞ்சினீயர்கள் வளர்ச்சி காண்பார்கள். உடன்பிறந்தவர்களால் உங்களுக்கும் உங்களால் அவர்களுக்கும் நலம் கூடும்.

துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பிறரால் பாராட்டப்படுவீர்கள். சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சாதனை பல ஆற்றுவார்கள். மக்களால் சிறு சங்கடம் ஏற்பட்டு விலகும். எதிரிகளின் கரம் வலுக்குறையும்.

போட்டிகளிலும் பந்தயங்களிலும் வெற்றி கிட்டும். ஸ்பெகுலேஷன் துறைகள் ஓரளவு லாபம் தரும். 12-ஆம் திகதி முதல் செவ்வாய் 11-ஆமிடம் மாறுவதால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.

பிரச்சனைகள் எளிதில் தீரும். வழக்கில் வெற்றி காண வழிபிறக்கும். செந்நிறப்பொருட்கள் லாபம் தரும். சொத்துக்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும்.

மிதுனம்

உங்கள் ராசிக்கு 2-ல் வக்கிர குருவும், 6-ல் சனியும், 8-ல் புதனும் 9=ல் சுக்கிரனும் 10-ல் கேதுவும் உலவுவதால் பொருள் வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும், முக்கியமான தகவல் ஒன்று வந்து சேரும்.

நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு உதவி புரிவார்கள். மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். மகப்பேறு பாக்கியம் சிலருக்கு இப்போது கிடைக்கும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள், வாசனைத் திரவியங்களின் சேர்க்கை நிகழும்.

வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் வெற்றி நடைபோடுவார்கள். பெண்களால் நலம் உண்டாகும். வாழ்க்கைத்துணை நலம் சிறக்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும்.

பொதுப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு வரவேற்பு கூடும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அலைச்சல் வீண்போகாது. ஜலப்பொருட்கள் லாபம் கொண்டுவரும்.

12-ஆம் திகதி முதல் செவ்வாய் 10-ஆமிடம் மாறுவதால் இயந்திரப்பணியாளர்களுக்கு லாபம் அதிகரிக்கும். மனத்தில் துணிவு பிறக்கும். காரியத்தில் வெற்றி கிட்டும்.

கடகம்

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 8-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பண நடமாட்டம் சற்று அதிகரிக்கும். சுய முயற்சியால் வளர்ச்சி காண்பீர்கள். நல்ல தகவல் வந்து சேரும்.

சிறு பயணம் ஒன்றை மேற்கொள்ளவும் அதனால் பயன் பெறவும் வாய்ப்புக் கூடிவரும். பிற மொழி, மத, இனங்களைச் சேர்ந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். கலைஞ்ர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும்.

மாதர்களது எண்ணம் ஈடேறும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். 5-ல் சனியும் 8-ல் செவ்வாயும் இருப்பதால் மக்களாலும் உடன்பிறந்தவர்களாலும் சில இடர்ப்பாடுகள் உண்டாகும்.

மறதியால் அவதி ஏற்படும். வீண் சண்டை, சச்சரவுகளைத் தவிர்ப்பது நல்லது. 7-ல் சூரியனும் புதனும் இருப்பதால் பிறரிடம் சுமுகமாகப் பழகுவது அவசியமாகும்.

12-ஆம் திகதி முதல் செவ்வாய் 9-ஆமிடம் மாறி, கேதுவுடன் இணைந்து, குருவால் பார்க்கப்படுவதால் புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். திருத்தல யாத்திரை மேற்கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும்.

சிம்மம்

உங்கள் ராசிக்கு அதிபதி சூரியன் 6-ல் புதனுடன் கூடியிருப்பது சிறப்பாகும். குரு 12-ல் இருந்தாலும் வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். அந்தஸ்தும் மதிப்பும் உயரும். வாழ்க்கை வசதிகள் கூடும்.

முக்கியஸ்தர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். உயர் பதவிகளும் பொறுப்புக்களும் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். அறிவாற்றல் பளிச்சிடும். சுப காரியங்களுக்காகவும் மக்கள் நல முன்னேற்றத்துக்காகவும் செலவு செய்வீர்கள்.

இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் எதிர்ப்புக்கள் இருக்கவே செய்யும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. கூட்டுத் தொழிலில் கவனம் தேவை.

முன் பின் அறிமுகம் இல்லாதவர்களை நம்பி ஏமாறாமல் இருப்பது நல்லது. உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியமாகும். இதய நோய் உள்ளவர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது.

தாய் நலனிலும் சகோதர நலனிலும் அக்கறை தேவைப்படும். 12-ஆம் திகதி முதல் செவ்வாய் 8-ஆமிடம் மாறுவதும் சிறப்பாகாது. சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம்; எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகும்.

கன்னி

உங்கள் ராசிக்கு 3-ல் சனியும், 6-ல் செவ்வாயும், 11-ல் குருவும் உலவுவதால் பொது நலப்பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னேற்றமான போக்கு தென்படும். தகவல் தொடர்பு இனங்கள் ஆக்கம் தரும்.

இயந்திரப்பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். நிலபுலங்களால் லாபம் கிடைக்கும். சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வெற்றிகள் குவியும். பாராட்டுகளும் பதக்கங்களும் பரிசுகளும் கிடைக்கும்.

வாரப் பின்பகுதியில் பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நற்காரியம் நிகழும். முக்கியமான எண்ணங்களில் ஒன்றிரண்டு ஈடேறும். சுக்கிரன், கேது ஆகியோரது நிலை சிறப்பாக இல்லாததால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வீண்சணடை கூடாது. 12-ஆம் திகதி முதல் செவ்வாய் 7-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது.

யாரிடத்திலும் சுமுகமாகப் பழகுவதன் மூலம் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம், கோபம் அடியோடு கூடாது.

துலாம்

உங்கள் ராசிக்கு 4-ல் புதனும் 5-ல் சுக்கிரனும், 10-ல் வக்கிர குருவும் உலவுவதால் நண்பர்கள், உறவினர்களால் நலம் உண்டாகும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். மாணவர்களது நிலை உயரும்.

கலைஞர்கள் சுபிட்சம் காண்பார்கள். பண நடமாட்டம் அதிகமாகும். திடீர்ப் பொருள் வரவுக்கும் இடமுண்டு. கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும்.

அலைச்சல் வீண்போகாது. ஆன்மிக வாதிகளுக்கு மதிப்பு உயரும். உடன்பிறந்தவர்கள் ஓரளவு உதவுவார்கள். 12-ல் ராகு இருப்பதால் பயணத்தின்போது விழிப்புத் தேவை. வீண் செலவுகளைத் தவிர்க்கவும். 12ம் திகதி முதல் செவ்வாய் 6-ஆமிடம் மாறுவதால் மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எதிர்ப்புக்கள் விலகும்.

வழக்கில் வெற்றி காணச் சந்தர்ப்பம் உருவாகும். பொறியியல், சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்னேற்றமான பாதை தெரியவரும். நிலபுலங்கள் லாபம் தரும்.

விருச்சிகம்

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும் 4-ல் சுக்கிரனும், 9-ல் குருவும், 11-ல் ராகுவும் உலவுவதால் முக்கியமான காரியங்கள் இனிது நிறைவேறும். அரசாங்க உதவி கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களைப் பாராட்டுவார்கள்.

நிர்வாகத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு கூடும். புதிய பதவிகளும் பட்டங்களும் பொறுப்புகளும் இப்போது கிடைக்கும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். மாதர்களது நிலை உயரும்.

பயணத்தால் அனுகூலம் உண்டாகும். புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் கிடைக்கும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும்.

குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். தந்தையாலும், வாழ்க்கைத்துணைவராலும் அனுகூலம் ஏற்படும். பிதுரார்ஜிதச் சொத்துக்கள் சிலருக்கு இப்போது சேரும். திடீர்ப் பொருள் வரவுக்கு இடமுண்டு.

12-ஆம் திகதி முதல் செவ்வாய் 5-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது என்றாலும் கேதுவுடன் கூடி குருவால் பார்க்கப்படுவதால் ஞான மார்க்கத்திலும் பக்தி மார்க்கத்திலும் ஈடுபாடு உண்டாகும். மக்களால் நலம் உண்டாகும். ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். சுபச் செலவுகளை மேற்கொள்ள வேண்டிவரும்.

தனுசு

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் 3-ல் சுக்கிரனும், செவ்வாயும் 10-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். குரு 8-ல் வக்கிரமாக உலவுவதால் ஓரளவு நலம் உண்டாகும்.

தொலைதூரத் தொடர்பால் பயன் பெறச் சந்தர்ப்பம் உருவாகும். நல்ல தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காண வழிபிறக்கும்.

கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வருவாய் அதிகரிக்கும்.

பேச்சாற்றல் கூடும். கல்வியாளர்கள் வளர்ச்சி காண்பார்கள். மத்தியஸ்தர்களாக இருப்பவர்கள் மதிப்பு உயரப் பெறுவார்கள். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.

தன்னம்பிக்கை கூடும். இயந்திரப்பணிகள் லாபம் தரும்.

கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். மாதர்களது எண்ணம் ஈடேறும். பயணம் சம்பந்தமான இனங்களில் வளர்ச்சி காணச் சந்தர்ப்பம் சாதகமாய் அமையும்.

வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். 12-ஆம் திகதி முதல் செவ்வாய் 4-ஆமிடம் மாறி கேதுவுடன் இணைவதால் எக்காரியத்திலும் அவசரம் கூடாது. தாய் நலனில் அக்கறை தேவை.

மகரம்

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும் 3-ல் கேதுவும் 7-ல் குருவும் 11-ல் சனியும் உலவுவதால் கலைத்துறை ஊக்கம் தரும். பொருளாதார நிலையில் விசேடமான வளர்ச்சி ஏற்படும்.

திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடிவரும். கலைஞர்களது நிலை உயரும். மாதர்களது எண்ணம் ஈடேறும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். பக்தி மார்க்கத்திலும் ஞான மார்க்கத்திலும் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மனத்தெளிவு உண்டாகும். சாதுக்களின் தரிசனம் கிடைக்கும்.

ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைத்துவரும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தொழில் வளர்ச்சிக்கான திட்டங்கள் இப்போது கைகூடும்.

இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்கள் ஆகியவை லாபம் தரும். கறுப்பு, கருநீல நிறப்பொருட்களால் அதிக ஆதாயம் கிடைக்கும். சமுதாய நல முன்னேற்றப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மதிப்பு உயரும்.

ஜன்ம ராசியில் சூரியனும் புதனும் உலவுவதால் தலை மற்றும் உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். 12-ஆம் திகதி முதல் செவ்வாய் 3-ஆமிடம் மாறி, கேதுவுடன் கூடி குருவின் பார்வையைப் பெறுவதால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.

துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். முக்கியமான காரியங்கள் நிறைவேறும்.

கும்பம்

உங்கள் ராசியில் சுக்கிரனும், 10-ல் சனியும் உலவுவது சிறப்பாகும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். எதிர்ப்புக்கள் விலகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும்.

கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் கூடிவரும். மாதர்களது நிலை உயரும். சமுதாய நலப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைத்துவரும். நண்பர்கள் அளவோடு உதவுவார்கள்.

இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் பயணத்தால் சங்கடம் உண்டாகும். வெளிநாட்டுத் தொடர்புடன் வர்த்தகம், தொழில் ஆகியவற்றில் ஈடுபாடு உள்ளவர்கள் விழிப்புடன் இருந்தால் நஷ்டப்படாமலும் சங்கடங்களுக்கு ஆட்படாமலும் தப்பலாம். விஷ பயம் உண்டாகும்.

குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களால் பிரச்னைகள் சூழும். வீண்வம்பு, வழக்குகளில் ஈடுபடலாகாது. 12-ஆம் திகதி முதல் செவ்வாய் 2-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது.

எதிலும் வேகத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. கோபம் அடியோடு கூடாது. கண், கால் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசு விவகாரங்களில் விழிப்புத் தேவை.

மீனம்

உங்கள் ராசிநாதன் குரு 5-லும் 11-ல் சூரியன், புதன் ஆகியோரும், 12-ல் சுக்கிரனும் சஞ்சரிப்பதால் எதிர்ப்புக்கள் குறையும். அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும்.

தந்தையார்ஜித சொத்துக்களைப் பெறச் சந்தர்ப்பம் கூடிவரும். முக்கியஸ்தர்களது தொடர்பு பயன்படும். அரசியல்வாதிகளுக்குச் செலவாக்கும் மதிப்பும் உயரும். அரசுப்பணியாளர்களுக்குப் பதவி உயர்வும், இடமாற்றமும் கிடைக்கும்.

வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். கணிதம், விஞ்னானம், மருத்துவம், எழுத்து, பத்திரிகை, தரகு போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு செழிப்புக் கூடும். நிறுவன, நிர்வாகத்துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண வாய்ப்புக் கூடிவரும். கலைத்துறையினருக்குத் திறமை வீண்போகாது.

மாதர்களது நோக்கம் நிறைவேறும். செவ்வாய், ராகு, கேது ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் பிற மொழி, மத, இனக்காரர்களால் தொல்லைகள் சூழும்.

பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் எச்சரிக்கையுடன் இருந்தால் விபத்துக்கு ஆளாகாமல் தப்பலாம்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum