Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


விநாயகர் காரிய சித்தி மாலை - விநாயகர் அஷ்டகம்

Go down

விநாயகர் காரிய சித்தி மாலை - விநாயகர் அஷ்டகம் Empty விநாயகர் காரிய சித்தி மாலை - விநாயகர் அஷ்டகம்

Post by Prasanna Kumar M Mon Dec 08, 2014 10:24 am

அனைவருக்கும் வணக்கம்,

விநாயகர் காரிய சித்தி மாலை பற்றி ஆன்மிகச்சுடர், மச்சமுனி மற்றும் பல வலைதளத்தில் படித்து அதன் பெருமையை உணர்ந்தேன். பற்பல சக்திகளை உள்ளடக்கிய விநாயர் காரிய சித்தி மாலையின் ஒலி கோப்பு ஏதாவது கிடைக்குமா என்று தேடிப் பார்த்ததில் கிடைத்தது ஏமாற்றமே. சமஸ்கிருத்தில் மட்டும் கிடைத்தது. ஆனால் தமிழில் ஒலி கோப்பு கிடைக்கவில்லை. இணையத்தில் தேடியும் நணபர்களிடம் கேட்டும் கிடைக்கவில்லை. 3 நாட்கள் முயற்சியில் இதன் முழுமையான ஒலி கோப்பு கிடைத்தது. இதனை தரவிறக்கம் செய்ய முடியாத படி தொழில்நுட்ப வகையில் தடை செய்திருந்தனர். விக்ன விநாயகரி்ன் அருளால் அதற்கு மாற்று தொழிற்நுட்பத்தை கொண்டு தரவிறக்கம் செய்து ஒரு காணொளியை தயார் செய்து இன்று (17-11-2014) பதிவேற்றுகிறேன். முடிந்த வரையில் அனைவருக்கும் தெரியப் படுத்துங்கள்.

விநாயகர் காரிய சித்தி மாலை


காஷ்யப முனிவர் வடமொழியில் இயற்றி, கச்சியப்பரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட விநாயகர் காரிய சித்தி மாலை, ஓர் ஒப்பற்ற மந்திரம். எந்தப் பணியை ஆரம்பித்தாலும் விநாயகரைத் தொழுதுவிட்டே ஆரம்பிப்பது ஆன்மிகர்களின் வழக்கம். எந்த விஷயத்தையும் எழுதுமுன் குட்டியாக ஒரு பிள்ளையார் சுழி போட்டுவிட்டு எழுதத் தொடங்குவதும் பலருக்கு வழக்கம். விக்னமில்லாமல் முடிய வேண்டிய எந்த வேலைக்கும் விக்னேஸ்வரரின் அருள் கட்டாயம் வேண்டும். அன்றைய கடமைகள் என்றில்லாமல், வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி பொங்கவும் எதிர்ப்படும் பிரச்னைகளை எளிதாகக் கையாளவும் முறையாகத்  திட்டமிடவும் அனைவரிடமும் அன்பு செலுத்தவும் அனைவரது அன்பும் நம் மீது பரவவும் சுமூகமான வாழ்வை சந்தோஷமாக மேற்கொள்ளவும் இந்த  விநாயகர் காரிய சித்தி மாலையை தினமும் ஜபிப்பது அவசியம் என்று வலியுறுத்துகிறார் காஷ்யப முனிவர். இந்த வழிபாடு முற்றிலும் தமிழிலேயே  அமைந்தது. எளிமையானது. நேரடியானது. நாமே பொருள் புரிந்து கொள்ளக்கூடியது. ஆகவே இப்பாடல்களுக்குத் தனியே விளக்கவுரை தேவைப்படாது.  


பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம்.

உலக முழுவதும் நீக்கமற ஒன்றாய்நிற்கும் பொருள் எவன்அவ்
உலகிற்பிறக்கும் விகாரங்கள் உறாதமேலாம் ஒளியாவன்
உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டும் களைகண் எவன் அந்த
உலக முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம்.

இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால் சுரர்வாழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க்கு ஊறின்றி கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதி பொன் சரணம் சரணம் அடைகின்றோம்.

மூர்த்தியாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்தி நாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன்அப்
போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

செய்யும் வினையின் முதல்யாவன் செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐயமின்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய்யில் இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம்.

வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும் நாதன்எவன் எண்குணன் எவன்அப்
போதமுதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

மண்ணின் ஓர் ஐங்குணமாகி வதிவான் எவன் நீரிடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன்தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம்.

பாச அறிவில் பசுஅறிவில் பற்றற்கரிய பரன் யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பயிலப் பணிக்கும் அவன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத் திகழச் சரணம் அடைகின்றோம்.

நூற்பயன்

இந்த நமது தோத்திரத்தை யாவன் மூன்று தினமும் உம்மைச்
சந்தி களில்தோத் திரஞ் செயினும் சகல கரும சித்திபெறும்
சிந்தை மகிழச் சுகம்பெறும்எண் தினம்உச் சரிக்கின் சதுர்த்தியிடைப்
பந்தம் அகல ஓர்எண்கால் படிக்கில் அட்ட சித்தியுறும்.

திங்கள் இரண்டு தினந்தோறும் திகழ ஒருபான் முறையோதில்
தங்கும் அரச வசியமாம் தயங்க இருபத் தொரு முறைமை
பொங்கும் உழுவ லால் கிளப்பின் பொருவின் மைந்தர் விழுக்கல்வி
துங்க வெறுக்கை முதற்பலவும் தோன்றும் எனச் செப்பி மறைந்தார்.

இந்த காரிய சித்தி மாலையை தினந்தோறும் மூன்று வேளைகளிலும் பாராயணம் செய்தால் சகல காரியமும் சித்தி பெறும். இரண்டு மாதங்கள் தொடர்ந்து பாராயணம் செய்தால் அரசர்களும் வசியமாவர். கல்வி, செல்வம் விருத்தியாகும் என விநாயகப்பெருமானே திருவாய் மலர்ந்தருளிய துதி இது.

இதன் ஆழ்ந்த உண்மைப் பொருள் விளக்கம் பெருங்குருமார்களிடம் சீடர்களாகி தெரிந்து கொள்ளலாம்.

ஏதாவது குறையிருப்பின் எனக்கு தெரிவிக்கவும் -  நிறையிருப்பின் மற்றவர்களுக்கு அறிவிக்கவும்.

நன்றி

மு. பிரசன்னகுமார்
ஆம்பூர்
வேலூர்.

Prasanna Kumar M

Posts : 10
மன்றத்தில் இணைத்த தேதி : 05/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum