Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


வாக்குறுதியை நிறைவேற்றிய ஜனாதிபதி

View previous topic View next topic Go down

வாக்குறுதியை நிறைவேற்றிய ஜனாதிபதி

Post by oviya on Thu Dec 17, 2015 1:36 pm

2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மக்களுக்கு வாய்மொழி மூலமும் எழுத்து மூலமும் வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் உரிய முறையில் நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல ஜீ.எச்.புத்ததாச மைதானத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதிகள் காற்றில் சென்று விட்டதாக சிலர் கூறிவருவது குறித்து அனுதாபப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபையின் 2 ஆயிரத்து 244 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நோக்கில் இந்த வைபவம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

2014ம் ஆண்டு டிசம்பரம் 17ம் திகதி இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பொதுவேட்பாளராக தேர்தலில் களமிறங்கியிருந்த மைத்திரிபால சிறிசேன, ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திற்கு சென்று வழங்கிய வாக்குறுதிக்கு அமைய இந்த நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum