Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


புலிச் சந்தேக நபருக்கு கடூழியச் சிறை

Go down

புலிச் சந்தேக நபருக்கு கடூழியச் சிறை

Post by oviya on Thu Dec 17, 2015 1:35 pm

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிச் சந்தேக நபர் ஒருவருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் ஒரு மாத கடூழியச் சிறைத்தண்டனை விதித்தும் ஒரு வருட புனர்வாழ்வு பயிற்சிகளை வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
38 வயதான ஆர். கிருஷ்ணகாந்தன் என்பவருக்கே மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி சீ. விஸ்வலிங்கம் இந்த தீர்ப்பை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள், வெடிப் பொருட்களை தன்வசம் வைத்திருந்தமை, பயங்கரவாத செயல்களுக்கு உதவியமை ஆகிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

துப்பாக்கி, கிளைமோர் குண்டு, கைக்குண்டு மற்றும் வெடி பொருட்களை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கிருஷ்ணகாந்தன் 2008 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகாந்த இந்த குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். இதனையடுத்தே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum