Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


பாராளுமன்றத்தில் இருவருக்கு எச்சரிக்கை!

View previous topic View next topic Go down

பாராளுமன்றத்தில் இருவருக்கு எச்சரிக்கை!

Post by oviya on Tue Dec 15, 2015 1:40 pm

பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அழுத்கமகே மற்றும் அமைச்சர் சுஜீவ சேனசிங்க ஆகியோருக்கு பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்கமகே உரையாற்றிக்கொண்டிருக்கும் போது இடையூறு விளைவித்தமைக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அழுத்கமகேவுக்கு பிரதி சபாநாயகர் எச்சரிக்கை விடுத்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பின்னர் சர்வதேச வர்த்தக பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்கவுக்கு இரண்டு முறை பிரதி சபாநாயகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சபையில் உரையாற்றும் போது பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயரை குறிப்பிடாமல் உரையாற்றுமாறு பிரதி சபாநாயகர் அறிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயரை பிரயோகித்த போது அது சபையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் என தெரிவித்து பிரதி சபாநாயகர் அவருக்கு எச்சரிக்கை விடுத்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

எச்சரிக்கையை மீறி உரையாற்றும் போது இரண்டாவது தடவையாக எச்சரிக்கை விடுத்த பிரதி சபாநாயகர் மூன்றாவது தடவையாக எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு செயற்பட வேண்டாம் என பிரதி அமைச்சருக்கு தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு மூன்று முறை எச்சரிக்கை விடுக்கும் பட்சத்தில் அவரை சபையிலிருந்து வெளியேற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum