Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


நாட்டில் ஒவ்வொரு குடிமகனும் அடிப்படை சட்டத்தை அறிந்திருக்க வேண்டும்!– ஜனாதிபதி

View previous topic View next topic Go down

நாட்டில் ஒவ்வொரு குடிமகனும் அடிப்படை சட்டத்தை அறிந்திருக்க வேண்டும்!– ஜனாதிபதி

Post by oviya on Sat Dec 05, 2015 1:24 pm

நாட்டிலுள்ள அனைவரும் அடிப்படை சட்டம் தொடர்பில் அறிந்திருக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
குருநாகல் - மலியதேவ மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அடிப்படை அறிவில் நாட்டு மக்கள் தெளிவுபெற்றிருப்பது அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளின் சிறப்பம்சங்கள் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சட்டக் கல்லூரிக்கு சென்று சட்டத்துறையில் பட்டப்படிப்பை பெறுவதோடு, நாட்டில் வாழ்கின்ற அனைத்துப் பிரஜைகளும் சட்டம் தொடர்பில் அடிப்படை அறிவைப் பெற்றிருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

சட்டத்துறை மாத்திரமன்றி ஏனைய அனைத்து துறைகளிலும் ஒவ்வொரு பிரஜையும் அடிப்படை அறிவைப் பெற்றிருக்க வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய தொழில்நுட்பத்தோடு பயணிக்கும் இந்த வர்த்தக சமூகத்தில் இடம்பெறுகின்ற போட்டித் தன்மையுடன் மோதுகின்ற எமக்கு அவசியமான மற்றும் அவசியமற்ற விடயங்களை உணர்ந்துகொள்ள வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum