Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


சிறு தொழில் முயற்சியாளர்கள் தொடர்பில் வரவு-செலவுத் திட்டத்தில் கவனம்! அமைச்சர் எஸ்.பி

View previous topic View next topic Go down

சிறு தொழில் முயற்சியாளர்கள் தொடர்பில் வரவு-செலவுத் திட்டத்தில் கவனம்! அமைச்சர் எஸ்.பி

Post by oviya on Wed Dec 02, 2015 12:40 pm

சிறு தொழில் முயற்சியாளர்கள் தொடர்பில் இம்முறை வரவு-செலவுத் திட்டத்தில் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.
வரவு-செலவுத் திட்டம் 2016 இன் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இம்முறை வரவு-செலவுத் திட்டத்தை ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவரும், நிதியமைச்சருமான ரவி கருணாநாயக்க திட்டமிட்டுள்ளார்.

இவ்வரவு செலவுத் திட்டத்தில் சில பிரச்சினைகள் உள்ளன. இந்த பிரச்சினைகளை தீர்த்து முன்னோக்கி செல்ல வேண்டும்.

முக்கிய தேசிய விடயங்களை கருத்திற் கொண்டு பிரதான கட்சிகள் இரண்டும் இணைந்து அரசாங்கத்தை அமைத்தன.

இந்த வரவு-செலவு திட்டத்தின் விசேட விடயம் என்னவென்றால், எமது சிறு தொழில் முயற்சியாளர்கள் பற்றி விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இன்று எமது நாட்டில் 90 வீதமுள்ள சிறு தொழில் முயற்சியாளர்களை விசேட கவனத்திற் கொண்டு வரவு-செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதனூடாக பிணையின்றி கடன் வழங்க நிதியமொன்றை உருவாக்க முன்மொழியப்பட்டுள்ளது.

திவிநெகும திட்டமானது சமுர்த்தி திட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum