Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அடுத்தாண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிப்பு! மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிப்பு

Go down

அடுத்தாண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிப்பு! மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிப்பு Empty அடுத்தாண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிப்பு! மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிப்பு

Post by oviya Fri Nov 20, 2015 12:26 pm




2016ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 69ஆவது வரவு செலவு திட்டத்தினை சமர்ப்பித்து நிதியமைச்சர் தற்போது உரையாற்றுகிறார்.

இதன்போது நாடு பாரிய சிக்கல் நிலையில் இருந்த போதே அரசாங்கத்தை பொறுப்பேற்றுக்கொண்டதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊழல், மோசடிகள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்கள் நிறைந்து காணப்பட்ட சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தை பொறுப்பேற்றுள்ளதோடு நூறு நாள் வேலைத்திட்டத்தில் பல்வேறு திட்டங்களை முன்வைத்துள்ளது.

பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவுதல் என்பவற்றின் ஊடாக நல்லாட்சியை உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எதிர்கால சந்ததியினருக்கு பயன்களை அனுபவிக்கும் வகையில் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதே இந்த அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

500 மில்லியனை அடிப்படையாகக் கொண்ட திட்டங்களை முன்வைக்காது பல மில்லியன் திட்டங்களை முன்வைப்பதே சிறந்த திட்டம்.

நீண்ட கால பிரதிலாபம் பெறும் வகையில் விசேட பொருளாதார அடித்தளம், கொண்ட கொள்கை சார்ந்த வரவு-செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய நல்வாழ்வை முன்னோக்கி கொண்டு செல்ல எதிர்கால தலைமுறையினருக்கு நன்மைகளை அனுமதிக்கக் கூடிய வகையில் பொருளாதாரத்தை உருவாக்குதல் தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும்.

கடந்த 10 மாதங்களில் சமூக அரசியல் மற்றும் பொருளாதாரம் பாரிய அளவில் மாற்றமடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் நாடு பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கியதோடு, பொருளாதார ரீதியில் முன்னேற்றம் காணமுடியாத நிலை காணப்படுகிறது.

தெற்குப் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் கொலைகளினால் பல்வேறு ரீதியில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.

இலங்கைக்கு எதிர்வரும் காலங்களில் அதிகளவிலான வெளிநாட்டு முதலீட்டாளர்களை கொண்டு வருவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

நாட்டில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட வீதி அபிவிருத்தி பணிகள், விமான நிலையங்களை அமைத்தல் மற்றும் துறைமுகங்களை நிர்மாணித்தல் போன்ற திட்டங்களுக்கு பாரியளவிலான வட்டிக்கு கடன் பெற்றுக் கொள்ளப்பட்டமையானது, பாரிய நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் தொகையை மீள செலுத்த தாம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக நிதியமைச்சர் சுட்டிக்காட்டினார்

விமானங்கள் வராத வகையிலான விமான நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டமை மற்றும் கப்பல் வராத துறைமுகங்கள் நிர்மாணிக்கப்பட்டமை நாட்டை பொருளாதார ரீதியில் பின்னோக்கி கொண்டு சென்றுள்ளது.

அத்துடன், வெளிநாடுகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பணத்தை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வந்து முதலீடு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், 2014ஆம் ஆண்டு தேசிய உற்பத்தியானது 10 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக நிதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் வருமானம், கடனை செலுத்தவே போதுமானதாக அமையாது. இதனூடாக நாட்டை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்ற முடியாது.

சேமிப்பு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது. நாட்டின் நிதி கட்டமைப்பில் பாரிய வீழ்ச்சி காணப்பட்டுள்ளமையை நிதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

காணி, வீடு மற்றும் சுகாதார துறைகள் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் அதிக கவனம் செலுத்தும்.

சர்வதேச சந்தை ஊக்குவிப்பு, முதலீட்டு ஊக்குவிப்பு, சீர்திருத்தப்பட்ட பொருளாதார கொள்கைகளின் படி இலங்கை புதிய அனுபவங்களை பெற்றுக்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த அரசாங்கம் குறைபாடுடைய பொருளாதார திட்டத்தையே பின்பற்றியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் கொள்கைகளை உருவாக்குவதன் மூலம் சுதந்திரமான சந்தை செயற்பாடுகளை செயற்படுத்த தேவையான சீர்திருத்தங்களை ஏற்படுத்த முடியும் என நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

2016ஆம் ஆண்டு முதல் ஜனவரி மாதம் முதல் ஒவ்வொரு நிறுவனங்களிலுமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களின் பிரகாரம் இந்த வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ரவி கருணாநாயக்க கூறினார்.

அதன்பிரகாரம், அத்தியாவசியமற்ற செலவீனங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், வரி செலுத்துவோருக்கு பயன் கிடைக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிய நன்மைகள் குறித்தும் தற்போதைய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

ஒய்வூதியம் பெறுவோர் தற்போது பெற்றுக் கொள்ளும் எந்தவொரு சலுகைகளிலும் குறைவு ஏற்படாது என நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

அதிகளவிலான சலுகைகளை அனைத்து தரப்பினருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

நாட்டின் அபிவிருத்திக்கு தனியார் துறையின் முதலீடுகள் அவசியம் என குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் முதலீடுகள் மிகவும் அதிகளவில் குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய நிதி அமைச்சர், அதனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய நிலையில் உள்ளதாக சுட்டிக்காட்டினார்.

அதிகளவிலான வெளிநாட்டு கடன்களை பெற்றுக் கொண்டுள்ளமையினால் கடன் சுமை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கான மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் கடன் முகாமைத்துவத்தை சரி செய்து, அதனூடாக கடன் சுமையை எவ்வாறு குறைப்பது என்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கல்வி தொடர்பில் அதிகளவிலான கொள்கைகள் கடந்த காலத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்தன. எனினும், இலங்கையில் கல்வித்துறை புனரமைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

குறைந்த வளங்களை கொண்ட பாடசாலைகளுக்கு, அதிகளவிலான வளங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழக கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மிக வேகமாக பரவிவரும் நோய்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய நிலைக்கு தமது அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளதுடன், அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

தனியார் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் தேவை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சேமிப்பு மற்றும் ஓய்வூதிய திட்டம் தொடர்பில் புதிய திட்டங்களை வகுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மத்திய வருமானத்தை பெறுவோருக்கு வீடமைப்பு திட்டத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேல் மாகாண அபிவிருத்தி திட்டமொன்றையும் ஏற்படுத்த தமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.

மேல் மாகாணத்தில் வாகன நெரிசலை குறைக்கவும், நகர பகுதிகளிலுள்ள ரயில் சேவைகளை விஸ்தரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

காலத்தின் தேவைக்கேற்ற வகையிலான முதலீடுகளை மேற்கொள்ளும் தனியார் முதலீட்டு நிறுவனங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

நிரந்தர அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்காக சூரிய மின் சக்தியை பயன்படுத்துவது அவசியம் என நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

தனியார் துறையின் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்புக்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அனைத்து இலங்கையர்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதே தமது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம், வெளிநாட்டு நிதியங்களை கொண்டு ஒரு நிதியமொன்றை ஏற்படுத்தி அதனூடாக நடுத்தர பிரிவினருக்கு உதவிகளை வழங்க தீர்மானிக்கபட்டுள்ளதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

மத்திய தர நிறுவனங்களுக்கு 50 வீத வரி விலக்கை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நடுத்தர பிரிவினர் தமது உற்பத்திகளை விநியோகிப்பதற்காக வர்த்தக நிலையங்களில் புதிய இடமொன்றை ஏற்படுத்திக் கொடுக்கவும் தீர்மானிக்க்பபட்டுள்ளதாக ரவி கருணாநாய்கக குறிப்பிட்டார்.

புதிய விவசாய கொள்கையொன்றை ஏற்படுத்த ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டாக்கும் போது சோளம், சோயா, போஞ்சி, கிழங்கு ஆகியவற்றின் ஊடாக நாட்டின் போஷனை தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.

விதை மற்றும் மரம் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்காக 1000 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்யவும் முன்மொழியப்பட்டுள்ளது.

விவசாயிகளின் விளைச்சல்களை களஞ்சியப்படுத்துவதற்கு புதிய தொழில்நுட்பத்தினுடனான களஞ்சியசாலைகளை ஏற்படுத்தவும் வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. அதற்காக அவர்களுக்கு வணிக வங்கிகளின் ஊடாக 50 வீத கடனை பெற்றுக் கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அவ்வாறான களஞ்சியசாலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், வட மாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் களஞ்சியசாலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த அரசாங்கத்தினால் பல தேவைகள் விவசாயிகளுக்கு பூர்த்தி செய்யப்பட்டுள்ள போதிலும், விவசாய துறையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.

இதனூடாக சர்வதேச நாடுகளுடன் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் உரத்தினால் பல்வேறு நோய்கள் ஏற்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

விவசாயிகளுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்ட போதிலும், அவர்கள் இன்றும் பின்தள்ளப்பட்ட நிலையிலேயே இருக்கின்றனர்.

விவசாயிகளுக்கு நிவாரண உதவியாக ஒரு ஹெக்டெயருக்கு 25,000 ரூபாவை வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பழ விவசாயம் நாட்டில் பின்தள்ளப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது.

இந்த தொழில்துறையில் ஈடுபட்டுள்ளோர் வங்கிகளில் பெற்றுக் கொள்ளும் கடனுக்காக வட்டி வீதத்தில் 50 வீத குறைப்பை முன்மொழியப்பட்டுள்ளது

400 கிராம் பால்மா பக்கெட் ஒன்றுக்கு 295 நிர்ணய விலை வரவு-செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

நிறுவனங்களுக்கு ஏற்படுகின்ற நட்டத்திற்காக அரசாங்கத்தினால் பக்கட் ஒன்றுக்கு 30 ரூபா வழங்கப்படுவதுடன், அதற்காக அரசாங்கத்தினால் 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மரக்கறி, பழங்கள் ஆகியவற்றை களஞ்சியப்படுத்துவதற்காக 2000 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்ய வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு ஒரு மில்லியன் காப்புறுதியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரின் மீன் உற்பத்தியை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்பத்தின் உடனான குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலைகளை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்பிரகாரம், சிலாபம், வல்வெட்டித்துறை, காரைநகர், மீரிய, கல்முனை ஆகிய பகுதிகளில் இந்த களஞ்சியசாலைகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

கீரி சம்பா 50 ரூபாவாகவும், சம்பா 41 ரூபாவாகவும், நாடு 38 ரூபாவாகவும், நிர்ணய விலை அடிப்படையில் அரிசி அரசினால் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும்.

ஒரு கிராம சேவகர் பிரிவிற்காக 1500 மில்லியனை வழங்கி அந்த கிராம சேவகர் பிரிவை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் அறிவித்தார்.

கிராமிய குளங்களை அபிவிருத்தி செய்வதற்காக 2000 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்ய வரவு செலவுத்திட்டத்தின் முன்மொழியப்பட்டுள்ளது.

தென்னை உற்பத்தி அபிவிருத்திக்காக 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படுவதுடன், தேயிலை உற்பத்தித்துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராய விசேட குழுவொன்றை அமைக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.

காட்டு யானைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதற்காக 400 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்ய நிதி அமைச்சர் தீர்மானித்துள்ளார்.

வவுனியாவில் பொருளாதார வலயமொன்றை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

தேயிலை ஏற்றமதியின்போது Ceylon tea என பெயரிடப்படுவது கட்டாயமாகும்.

எல்லா பிரதேசங்களிலும் விவசாய நிறுவனங்கள் நிரறுவப்படும்.

தங்க இறக்குமதிக்கு மத்திய வங்கியின் ஊடாக 50 அனுமதிப் பத்திரங்களில் விநியோகிக்கப்படுவதுடன், அதனை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு தங்கத்தை இறக்குமதி செய்ய முடியாது என நிதி அமைச்சர் அறிவித்தார்.

தங்க இறக்குமதிக்காக 25 வீத வரிச் சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தேசிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்த தீர்மானி்க்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

“பொக்குரு கம்மான” திட்டத்தின் மூலம் கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தல் : 21 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு

அரச நிறுவனங்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்படுகின்றது.

பொலிஸ் மற்றும் தபால் திணைக்களங்களும் முழுமையான முறையில் டிஜிட்டல் முறையில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்தவருடம் முதல் ஏப்ரல் மற்றும் ஒக்டோபரில் வருடாந்த இரத்தினக்கல் ஏலம்.

அனைத்து அரச கட்டிடங்களுக்கும் புதிய தொழிநுட்பத்தை உற்செலுத்த வேண்டும். போதைப்பொருள் ஒழிப்பு மற்றம் சிறுவர் பாதுகாப்பிற்கு 2000 மில்லியன் ரூபா ஒதுக்கிடு.

ஏற்றுமதியை மேம்படுத்துவதற்காக நிறுவனமொன்றை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், அரச நிறுவனங்கள் அனைத்தையும் 2018ஆம் ஆண்டு ஒரு வலயமைப்புக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்

வெளிநாட்டு பிரஜைகளின் முதலீட்டுக் கோரிக்கை 15 நாட்களில் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய துறைமுகங்களில் கப்பல்களை நிர்மாணிக்கும் இடங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

சிறுவர் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்தினால் 2000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதி அமைச்சர் அறிவித்தார்.

இந்தியாவில் காணப்படும் 'ஆதார்" திட்டம் போல் இலங்கையிலும் அமுல்படுத்தப்படும். வர்த்தக நடவடிக்கையை ஆரம்பிக்கும் போது 10 மில்லியன் ரூபா முதலீடு அல்லது 500 புதிய தொழில்வாய்ப்பு

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு 50 வீதம் வரிச்சலுகை. புதிய முதலீட்டு திட்டம் அமுல்.

வீடுகளுக்கு சூரிய மின்சக்திக்காக வரிச் சலுகைகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நிர்மாணத்துறை சார்ந்த விடயங்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதுடன், அவர்கள் இலங்கையிலுள்ள நிர்மாண நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட வேண்டியது அத்தியாவசியமாக காணப்படுகின்றது. அத்துடன், மத்திய தர நிர்மாணத்துறை நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum