Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


கட்சி தலைமையின் அனுமதி இன்றி கூட்டங்களை நடாத்த வேண்டாம்: துமிந்த திஸாநாயக்க

Go down

கட்சி தலைமையின் அனுமதி இன்றி கூட்டங்களை நடாத்த வேண்டாம்: துமிந்த திஸாநாயக்க

Post by oviya on Sat Nov 14, 2015 12:18 pm

இலங்கை சுதந்திர கட்சியின் தலைமையான , ஜனாதிபதி மைத்திரியின் அனுமதி இன்றி கூட்டங்களையோ, கலந்துரையாடல்களையோ நடத்த வேண்டாம் என, கட்சி பொது செயலாளர் துமிந்த திஸாநாயக்கவினால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் அனைவருக்கும் இவ்வாறு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுதந்திர கட்சியியோ அல்லது சுதந்திர கூட்டமைப்போ அன்றி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவில் நாடாளுமன்ற உறுப்புரிமையை பெற்ற சிலர் பொது எதிர்கட்சி ஒன்றை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் காரணமாவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதேநேரம் சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு மற்றும் நிறைவேற்று சபையை விரைவில் கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி எதிர்வரும் செவ்வாய் கிழமை சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவும், எதிர்வரும் 20ம் திகதி கட்சியின் நிறைவேற்றுக்குழுவும் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறவுள்ளது.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum