Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


உள்நாட்டு விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் அவசியம்!– வடக்கு முதல்வர்

Go down

உள்நாட்டு விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் அவசியம்!– வடக்கு முதல்வர்

Post by oviya on Sat Nov 07, 2015 1:22 pm

போர் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்த அரசாங்கம் ஸ்தாபிக்க போகும் தேசிய விசாரணைப் பொறிமுறைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சில யோசனைகளை முன்வைக்க உள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடுத்த வாரம் இந்த யோசனைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்க உள்ளது.

அதேவேளை ஸ்தாபிக்கப்பட போகும் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் அவசியம் என வடக்கு முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜப்பானிய தூதுவர் நெனிச் சுகுவாவிடம் அவர் இதனை கூறியுள்ளார்.

உள்நாட்டு பொறிமுறையில் இலங்கை நீதிபதிகள் நியமிக்கப்பட்டால், போர் குற்றவாளிகள் விடுதலையடைந்து விடுவார்கள் எனவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் தமிழ் நீதிபதிகள் இருந்த போதிலும் அவர் சரியான தீர்மானத்தை எடுக்க மாட்டார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum