Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


வெலிக்கந்தை காட்டுப் பகுதியில் விபத்துக்குள்ளான பஸ்: மயிரிழையில் உயிர்தப்பிய பயணிகள்

View previous topic View next topic Go down

வெலிக்கந்தை காட்டுப் பகுதியில் விபத்துக்குள்ளான பஸ்: மயிரிழையில் உயிர்தப்பிய பயணிகள்

Post by oviya on Wed Oct 28, 2015 1:21 pm

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு விபத்து ச்சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
இன்று காலை மட்டக்களப்பு- திருகோணமலை பிரதான வீதியில் உள்ள வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற வீதி விபத்தில் வான் ஒன்று தடம்புரண்டுள்ளது.

குறித்த விபத்தில் எந்தவித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் நேற்றைய தினம் (27.10.2015)மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் பஸ் வண்டி வெலிக்கந்தை காட்டுப் பகுதியில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த ஏறாவூர்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 29 பேர் மயிரிழையில் உயிர்தப்பினர்.

அடைமழை காரணமாக வீதி தெளிவாகத் தெரியாமையினால் வீதியில் இருந்து விலகிய பஸ்வண்டி காட்டுப்பகுதிக்குள் சென்றதாகவும் சாரதி கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக நீடித்துவரும் அடைமழை காரணமாக வீதிகள் சேதமடைந்துள்ளதனால் இவ்வாறான விபத்துக்கள் ஏற்படுவதாக கூறும் பொலிசார் வாகனசாரதிகள் வாகனங்களை மெதுவாக செலுத்துவதன் ஊடாக இவ்வாறான விபத்துக்களை தவிர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum