Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


நாவிதன்வெளியை ஊடறுத்துச் செல்லும் கிட்டங்கி ஊடான போக்குவரத்து தடைப்படும் அபாயம்

Go down

நாவிதன்வெளியை ஊடறுத்துச் செல்லும் கிட்டங்கி ஊடான போக்குவரத்து தடைப்படும் அபாயம்

Post by oviya on Tue Oct 27, 2015 1:12 pm

மட்டக்களப்பு அம்பாரைமாவட்டங்களில் கடந்த மூன்றுதினங்களாக பெய்து வரும் அடைமழையின் காரணமாக கல்முனை நாவிதன்வெளியினை இணைக்கும் கிட்டங்கி வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்து தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அத்தோடு பல தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிவருவதுடன் வீதிகளின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள துரைவந்தியமேட்டுக் கிராமத்திற்கான இருவழிப்பாதையும் நீரில்மூழ்கி வருவதுடன் போக்குவரத்தும் தடைப்படும் நிலையில் அக் கிராம மக்கள் உள்ளனர்.

இதுதொடர்பாக நாவிதன்வெளிப் பிரதேசசெயலாளர் சு.கரனிடம் கேட்டபோது கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழையின் காரணமாக கிட்டங்கிவீதி நீரில் மூழ்கிவருவதுடன் போக்குவரத்தும் தடைப்படும் நிலை உருவாகலாம் அதற்காக இயந்திரப்படகினை ஒழுங்கு செய்து தயார் நிலையில் வைத்துள்ளோம்.

போக்குவரத்து தடைப்படும் பட்சத்தில் படகுசேவை உடன் ஆரம்பிக்கப்படும் போக்குவரத்துத் தொடர்பாக மக்கள் அஞ்சத்தேவையில்லை எனவும் தெரிவித்தார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum