Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பில் அறிக்கை கோரும் ஜனாதிபதி

Go down

காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பில் அறிக்கை கோரும் ஜனாதிபதி

Post by oviya on Tue Oct 20, 2015 2:57 pm

வவுனியாவில் வைத்து காணாமல் போயுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பில் விசாரணை அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வவுனியா பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தின் கீழ் செயற்படும் விசேட விசாரணைப் பிரிவின் சார்ஜண்ட் தர பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 07ம் திகதி தொடக்கம் காணாமல் போயுள்ளார்.

ஆகஸ்ட் 07ம் திகதியன்று லீவு பெற்றுக் கொண்டு வீடு செல்வதற்காக புறப்பட்டுச் சென்ற குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அதன் பின் கடமைக்குத் திரும்பவில்லை. அத்துடன் தனது வீட்டுக்கும் சென்றிருக்கவில்லை. இடையில் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார்.

இதுதொடர்பாக ஜனாதிபதியின் கவனத்துக்கு பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்பத்தினர் முறைப்பாடு ஒன்றை அனுப்பியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணையொன்றை நடத்தி அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum