Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


திருகோணமலையில் இருவர் கைது! இராணுவ அதிகாரிக்கு வலைவீச்சு

View previous topic View next topic Go down

திருகோணமலையில் இருவர் கைது! இராணுவ அதிகாரிக்கு வலைவீச்சு

Post by oviya on Tue Oct 20, 2015 2:55 pm

திருகோணமலையில் 8 பெருங்குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் எனும் சந்தேகத்தில் இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை பொலிஸ் தலைமைக் காரியாலயம் மற்றும் உப்புவெளி பொலிஸ் பிரிவின் பெருங்குற்றத் தடுப்பு பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் கொள்ளையிடுவதற்கு உபயோகித்த மோட்டார் சைக்கிள் உட்பட மூன்று இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான பல பொருட்களும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

லிங்கநகர் மற்றும் சீனக்குடா பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வழங்கிய வாக்குமூலத்தில் மேலுமொரு ஒரு ராணுவ அதிகாரியை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் உப்புவெளி போளிஸ் பிரிவின் பிரதம பொலிஸ் பரிசோதகர் ஜனக ஜெயரத்ன அடங்கிய குளுவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபர்கள் மற்றும் அவர்களிடமிருந்து கைது செய்யப்பட்ட பொருட்கள் நாளை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum