Top posting users this month
No user |
நல்லாட்சிக்காக குரல் கொடுத்த அர்ஜூன ரணதுங்கவும் மக்களை ஏமாற்றினார்!
Page 1 of 1

துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, தமது சகோதரர் தம்மிக்க ரணதுங்கவை துறைமுக அதிகாரசபையின் தலைவராக நியமித்துள்ளார்.
இந்தநிலையில் தம்மிக்க ரணதுங்க கடந்த வியாழக்கிழமையன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
முன்னாள் அரசாங்கத்தின் ஊழல்கள் தொடர்பில் முன்னின்று செயற்பட்ட அர்ஜூன ரணதுங்கவின் இந்த நடவடிக்கை வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே 100 நாள் அரசாங்க காலத்தின் போது துறைமுக அதிகாரசபையின் முன்னாள் தலைவர் மற்றும் உபதலைவர்கள் உட்பட்ட பணிப்பாளர் சபை தமது இராஜினாமைவை அர்ஜூன ரணதுங்கவிடம் கையளித்தது. எனினும் தேவைப்பட்டால் மாத்திரமே அதனை பயன்படுத்தப் போவதாக அர்ஜூன உறுதியளித்திருந்தார்.
இந்தநிலையில் செப்டம்பர் 8ஆம் திகதியன்று அமைச்சர் ரணதுங்க, குறித்த தலைவர் உட்பட்ட பணிப்பாளர் சபையின் இராஜீனாமாவை ஏற்றுக்கொண்டதாக அவர்களுக்கு அறிவித்துள்ளார். எனினும் முன்கூட்டியே அறிவித்தல் எவையும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை
இந்தநிலையில் துறைமுக அதிகாரசபையின் புதிய தலைவரான தம்மிக்க ரணதுங்க, இலங்கை கிரிக்கட் அணிக்காக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum