Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


விசாரணைக்கு அழைத்து அரசியல் இலாபம் பெற முயற்சிக்கும் அரசாங்கம்: மகிந்தவின் ஊடகப் பிரிவு

Go down

விசாரணைக்கு அழைத்து அரசியல் இலாபம் பெற முயற்சிக்கும் அரசாங்கம்: மகிந்தவின் ஊடகப் பிரிவு

Post by oviya on Thu Oct 15, 2015 2:01 pm

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை விசாரணைக்கு அழைத்து அவர் ஏதோ தவறு செய்துள்ளார் என்று மக்களுக்கு காண்பித்து அரசியல் இலாபம் பெற அரசாங்கம் முயற்சித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
5 விடயங்கள் சம்பந்தமாக அரசாங்கம் நியமித்துள்ள பாரதூரமான ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதியை இன்று விசாரணைக்கு அழைத்திருந்தது.

வெற்றிடம் இல்லாத நேரத்தில் அனுர சிறிவர்தனவை சுயாதீன தொலைக்காட்சியின் தலைவராக நியமித்தமை ஒரு விடயம்.

சுயாதீன தொலைக்காட்சியின் தலைவரை நியமிப்பது ஜனாபதிபதியல்ல, அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் பங்கு உரிமைகளை கொண்டுள்ள திறைசேரியின் செயலாளரே தலைவரை நியமிப்பார்.

அத்துடன் முதலில் தலைவராக இருந்தவர் விலகிய பின்னரே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஜனாதிபதித் தேர்தலின் போது விளம்பரங்களுக்காக செலுத்தப்பட வேண்டிய முழுத் தொகையும் மீடியா பெக்டரி, ஸ்பெஷல் சொலுசன் ஆகிய நிறுவனங்கள் செலுத்தியுள்ளன.

பெருமளவில் விளம்பரங்களை ஒளிப்பரப்பும் போது, ஓரளவு விளம்பரங்களை இலவசமாக ஊடக நிறுவனங்கள் ஒளிப்பரப்புவதுண்டு.

எதிரணி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவின் விளம்பரங்களை ஒளிப்பரப்பாது பணத்தை திரும்பி செலுத்தியது சுயாதீன தொலைக்காட்சியின் உள்விவகாரம்.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக போட்டியிட்டார்.

தேர்தல் நடைபெறும் நேரத்தில் விளம்பரங்களை எந்த ஊடக நிறுவனங்களுக்கு வழங்குவது, அப்படி வழங்கப்பட்ட எத்தனை விளம்பரங்கள் ஒளிப்பரப்பட்டன என்பதை அவதானிக்க தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரால் முடியாது.

அத்துடன் ஊடக நிறுவனங்களுக்கு விளம்பரங்களை வழங்குவது தேர்தல் போட்டியிடும் வேட்பாளர் அல்ல. அவர் அங்கம் வகிக்கும் அரசியல் அமைப்பு அல்லது கட்சி விளம்பரங்களை தயாரிக்க விளம்பர நிறுவனங்களுக்கு வழங்கும்.

அவை அவற்றை ஊடக நிறுவனங்களுக்கு வழங்கும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரோ அவரது அரசியல் கட்சியோ இது சம்பந்தமாக ஊடக நிறுவனங்களுடன் நேரடியாக சம்பந்தப்படுவதில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum