Top posting users this month
No user |
நாட்டை முன்னேற்றுவதில் ஓய்வூதியம் பெறுவோரின் பங்களிப்பை பெற்றுக் கொள்ள நடவடிக்கை
Page 1 of 1

நாட்டை முன்னேற்றும் செயற்பாடுகளில் ஓய்வூதியம் பெறுவோரின் சேவையைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுநிர்வாக, அரச முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
ஓய்வூதியம் பெறுவோருக்கான தேசிய தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. கடந்த 2007ம் ஆண்டு தொடக்கம் கொண்டாப்படும் ஓய்வூதியம் பெறுவோருக்கான தேசிய விழா இன்று கொழும்பில் நடைபெற்றது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார,
அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றவுடன் பலரும் ஒதுங்கிப் போய் காலம் கழிக்க விரும்புகின்றார்கள். ஆனால் நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வதற்கான செயற்பாடுகளில் அவர்கள் பங்கேற்க முடியும். அவ்வாறான பங்களிப்பை பெற்றுக் கொள்ள நாம் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
ஓய்வூதியம் பெறுவோரும் தங்களால் முடிந்த வகையில் நாட்டின் முன்னேற்றத்துக்கான பங்களிப்பை வழங்க முன்வரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்த விழாவின் முக்கிய அம்சமாக ஓய்வூதியம் பெறுவோருக்கான இணையத்தள வானொலி (வெப் ரேடியோ) மற்றும் சஞ்சிகையொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum