Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


தேசிய விசாரணையை நடத்த வேண்டும் என்றவர்கள் இன்று அதனை எதிர்க்கின்றனர்: சாந்த பண்டார

Go down

தேசிய விசாரணையை நடத்த வேண்டும் என்றவர்கள் இன்று அதனை எதிர்க்கின்றனர்: சாந்த பண்டார

Post by oviya on Mon Oct 05, 2015 1:34 pm

இலங்கையின் மனித உரிமை தொடர்பாக தேசிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோஷமிட்டு வந்தவர்கள் தற்போது தேசிய விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவரான முன்னாள் பிரதியமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

சர்வதேச நாடுகள் அன்று இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறும் போது உள்நாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கூறியவர்கள், தற்போது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அணிகளின் கொள்கையில் இருந்து கொண்டு உள்நாட்டு விசாரணைக்கு எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த கௌரவத்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கும் அதேவேளை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தேசிய விசாரணையை நடத்த சர்வதேசத்தை இணங்க செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிக்கும் கௌரவம் அணிக்கப்பட வேண்டும்.

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மனித உரிமை பிரச்சினை தொடர்பில் சர்வதேச தலையீடு இன்றிய தேசிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருந்து வந்துள்ளது எனவும் சாந்த பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum