Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


அமெரிக்கா மற்றும் இலங்கை கொடிகளை எரித்து தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம்

View previous topic View next topic Go down

அமெரிக்கா மற்றும் இலங்கை கொடிகளை எரித்து தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம்

Post by oviya on Thu Oct 01, 2015 1:31 pm

தமிழகம், புதுச்சேரியில் மறியல் போராட்டம் நடத்திய சட்டக் கல்லூரி மாணவர்கள் அமெரிக்கா மற்றும் இலங்கை கொடிகளை எரித்தனர்.
புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காலாப்பட்டு என்ற இடத்தில் நடைபெற்ற மறியலில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.

அப்போது அவர்கள், அமெரிக்கா மற்றும் இலங்கை நாடுகளுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

இருநாட்டு கொடிகளை எரிக்க முயன்ற மாணவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது இருதரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதனைத் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மாணவர்கள் கலைந்து சென்றனர்.

மாணவர்களின் இந்த மறியல் போராட்டம் காரணமாக புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum