Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


ஜனாதிபதி இம் மாத இறுதியில் அமெரிக்கா விஜயம்!

View previous topic View next topic Go down

ஜனாதிபதி இம் மாத இறுதியில் அமெரிக்கா விஜயம்!

Post by oviya on Sat Sep 19, 2015 1:53 pm

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம் மாத இறுதியில் அமெரிக்கா விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
நியுயோர்க், ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ளார்.

அத்துடன் அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமாவையும் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை மாநாட்டின் 70வது அமர்வு செப்டெம்பர் மாதம் 30ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதற்கிடையில், ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்காவினால் முன்வைக்கப்படும் யோசனை செப்டெம்பர் மாதம் 24ம் திகதி கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்படும் என ஜெனிவா தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்பில் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை கடந்த புதன்கிழமை முன்வைக்கப்பட்ட நிலையில் அதன் மூலம் பல பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டன.

எப்படியிருப்பினும் உள்நாட்டு பொறிமுறைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் யோசனை ஒன்றினையே அமெரிக்கா முன்வைக்கவுள்ளது.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum