Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


மேல்மாகாண சபையின் புதிய அமைச்சரவை நியமனம்

Go down

மேல்மாகாண சபையின் புதிய அமைச்சரவை நியமனம்

Post by oviya on Mon Sep 14, 2015 3:08 pm

மேல் மாகாண சபையின் புதிய அமைச்சரவை ஜனாதிபதியின் சிபாரிசின்பேரில் இன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண சபைக்கான புதிய முதலமைச்சராக இசுர தேவப்ரிய அண்மையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருந்தார்.

அதனையடுத்து மாகாண அமைச்சரவையை மாற்றியமைத்துத் தருமாறும் அவர் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் ஜனாதிபதியின் சிபாரிசின் பேரில் இன்று மேல்மாகாண புதிய அமைச்சரவை நியமனம் செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் இசுர தேவப்பிரிய மாகாண நிதி மற்றும் திட்டமிடல், பொறியியல் சேவைகள், சட்டம், ஒழுங்கு, உள்ளுராட்சி நிர்வாகம், பொருளாதார அபிவிருத்தி, மின்சாரம் மற்றும் சக்திவலு, சூழல் பாதுகாப்பு, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு, சுற்றுலாத்துறை ஆகிய அமைச்சுப் பொறுப்புகளையும் தன் வசம் வைத்துக் கொண்டுள்ளார்.

மாகாணத்தின் புதிய அமைச்சர்களாக ரஞ்சித் சோமவங்ச, காமினி திலகசிறி, லலித் வனிகரத்ன ஆகியோருடன் ஹெல உறுமயவின் முக்கியஸ்தர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்கவுக்கும் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண முன்னாள் அமைச்சர் உபாலி கொடிகாரவுக்கு இம்முறை அமைச்சுப் பதவி ஏதும் வழங்கப்படவில்லை.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum