Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


மக்களுக்கு செய்ய வேண்டிய அபிவிருத்தி பணிகளை தொழிற்சங்க பேதமின்றி முன்னெடுப்பேன்: திகாம்பரம்

Go down

மக்களுக்கு செய்ய வேண்டிய அபிவிருத்தி பணிகளை தொழிற்சங்க பேதமின்றி முன்னெடுப்பேன்: திகாம்பரம்

Post by oviya on Tue Sep 08, 2015 2:58 pm

கடந்த காலங்களில் பாராளுமன்ற பதவிகளுடன் இருந்த மலையக அரசியல் தலைவர்கள் தங்களுடைய சுகபோக வாழ்க்கையை வாழ்ந்தார்களே தவிர மலையக மக்களுடைய அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கவில்லை.
மக்களின் குடிநீர் மற்றும் சுகாதார பிரச்சினைகளையும் முன்நின்று தீர்த்து கொடுக்கவில்லை என உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

அவர் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் மேலும் இங்கு தெரிவிக்கையில்…

மலையக மக்கள் எனக்கு வாக்களித்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இம்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினையை தீர்த்து வைக்க என்னால் முடியும் என்ற நம்பிக்கையை வைத்ததன் காரணமாக இவர்கள் எனக்கு அதிகபடியான வாக்குகளை வழங்கியுள்ளனர்.

தற்போது எனக்கு கிடைத்த அமைச்சு பதவியை வைத்து மக்களுக்கு செய்ய வேண்டிய அபிவிருத்தி வேலைகளை தொழிற்சங்க பேதமின்றி முன்னெடுப்பேன்.

அத்தோடு 5 வருட காலங்களில் மலையக மக்களின் உட்கட்டமைப்பு வசதிகள், குடிநீர், சுகாதாரம் போன்ற பல பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பேன். இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தில் பெரும்பாலான நிதி மலையக மக்களுடைய அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும். உலக வங்கியும் உதவி செய்யவுள்ளது. இந்த நிதியை வைத்து மலையகத்தில் எல்லா பிரதேசங்களிலும் உள்ள மக்களுக்கு சிறந்த முறையில் வேலைத்திட்டங்களை நான் முன்னெடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum