Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


உள்ளக விசாரணை வரவேற்கத்தக்கது: குமரன் பத்மநாதன்

Go down

உள்ளக விசாரணை வரவேற்கத்தக்கது: குமரன் பத்மநாதன்

Post by oviya on Tue Sep 08, 2015 2:56 pm

சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பிலான உள்ளக விசாரணைகள் வரவேற்கத்தக்கதென என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி தெரிவித்துள்ளார்.
தற்போது கிளிநொச்சியில் ஆனாதை இல்லம் ஒன்றை நிர்வகித்து வரும் கே.பி ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

யுத்ததின் போது வடக்கு கிழக்கில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றமை குறித்து கடந்த காலங்களில் உள்ளக விசாரணை நடத்தப்பட்டன.

எனினும் யுத்த இறுதிக் கட்டத்தின் போது இழைக்கப்பட்டதாக நம்பப்படுகின்ற போர் குற்றங்கள் தொடர்பில் முதல் தடவையாக சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் விசாரணை நடத்தப்படவுள்ளது.

சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்பட்டால் சமூகத்துக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றது.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் அனைத்து தரப்பினரினாலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளது.

சர்வதேச சமூகத்தின் கண்காணிப்புடன் நடத்தப்படும் உள்ளக விசாரணைகளின் காரணமாக சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.

மிக நீண்ட கால கொடூரமான யுத்தத்தின் பின்னர் நாடு இயல்பு நிலைமைக்கு திரும்பி வருகின்றதனை காணமுடிகின்றது.

எனவே நாட்டில் முக்கியமான விடயங்கள் தொடர்பில் சர்வதேசம் கையாளும் போது மிகுந்த எச்சரிக்கை அவசியமானது.

சர்வதேச சமூகத்திற்கு உள்நாட்டு யுத்தம் தொடர்பில் நேர் மறையான அனைத்து விடயங்களும் நன்கு தெரியும்.

எனவே நாட்டின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியமை அவசியம்.

சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென கோரும் உள்நாட்டு வெளிநாட்டு தரப்பினர் மனிதாபிமான பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டவில்லை.

யுத்தத்தின் பின்னரான மனிதாபிமான பிரச்சினைகள் தொடர்பில் அதிகம் அவதானம் செலுத்தப்பட வேண்டியது அவசியமென குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum