Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


மீண்டுமொரு இனக்கலவரத்திற்கு வித்திடும் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் செயல்பாடுகள்

Go down

மீண்டுமொரு இனக்கலவரத்திற்கு வித்திடும் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் செயல்பாடுகள்

Post by oviya on Tue Sep 08, 2015 2:54 pm

இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் செயல்பாடுகள் மீண்டுமொரு இனக்கலவரத்திற்கு வித்திடும் வகையில் அமைந்துள்ளதாக முஸ்லிம் புத்திஜீவிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் கடுமையான இனவாதப் போக்குடன் நடந்து கொண்ட பொதுபல சேனா அமைப்பானது, சிங்கள மக்களை முஸ்லிம்களுக்கு எதிராக திருப்புவதற்கு தவ்ஹீத் ஜமாத்தின் செயற்பாடுகளை பயன்படுத்திக் கொண்டது.

இளம் வாலிபர்களால் நடத்தப்படும் இந்த அமைப்பானது தனது செயற்பாடுகள் மூலம் தொடர்ந்தும் அமைதியின்மையை ஏற்படுத்தி வருவதாக முஸ்லிம் புத்திஜீவிகளும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

ஆட்சி மாற்றத்தில் பொதுபல சேனா அமைப்பின் செயற்பாடுகள் முடங்கியிருக்கும் நிலையில் முஸ்லிம்கள் பெரும்பாலும் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பொதுபல சேனா மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினருக்கு இடையிலான மோதல் மீண்டும் வெடித்துள்ளது.

ஹெம்மாதகமையில் நடைபெற்ற இந்த மோதல் சம்பவம் தொடர்பில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் பௌத்த சாசனத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். எனினும் இதனை முன்னிட்டு மாவனல்ல பிரதேசத்தில் மீண்டும் இனக்கலவரம் வெடிக்கும் சூழல் ஏற்படலாம் என்று அங்குள்ள முஸ்லிம்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum