Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


புலிகளுக்கு மகத்தான மதிப்பு ஏற்பட்டுள்ளது: தேசிய சுதந்திர முன்னணி

Go down

புலிகளுக்கு மகத்தான மதிப்பு ஏற்பட்டுள்ளது: தேசிய சுதந்திர முன்னணி

Post by oviya on Mon Sep 07, 2015 2:50 pm

ஜனவரி 8 ஆம் திகதி மேற்கொண்டதாக கூறும் வானவில் புரட்சியின் உரிமையாளர்கள் இரண்டு பக்கங்களில் இருந்து கொண்டு நாட்டை ஆட்சி செய்வதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
அது மாத்திரமின்றி நாடாளுமன்றத்தை இரண்டாக பிரித்து கொண்டு நிர்வாகம் செய்கின்றனர் என அந்த முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாமில் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டின் இன்றைய ஜனாதிபதியும், வானவில் புரட்சியின் ஏனைய உரிமையாளர்களும் நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு முரணாக செயற்பட்டு, நாடாளுமன்றத்தை வலுவான ஜனநாயக கலந்துரையாடல் மண்டபமாக மாற்றுவதை தடுத்து வருவதை காணமுடிகிறது.

புலிகளுக்கு தேவை மகந்தான மதிப்பு அதற்கு தேவை மைத்திரி யுகம் என்ற நாங்கள் இதற்கு முன்னர் தெளிவாக கூறியிருந்தோம். தற்போது புலிகளுக்கு தேவையான மதிப்பு உருவாகியுள்ளது.

சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைராக நியமிக்கப்படுவார் என்று நாங்கள் கூறியிருந்தோம். சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படுவதோடு, ஜே.வி.பியின் அனுரகுமார திஸாநாயக்க எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக நியமிக்கப்படுவார் என்று கடந்த தேர்தலில் தெரிவித்தோம் எனவும் முஸ்ஸாமில் கூறியுள்ளார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum