Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


கிடைத்த அமைச்சுப் பதவி போதவில்லை! புலம்பும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்

Go down

கிடைத்த அமைச்சுப் பதவி போதவில்லை! புலம்பும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்

Post by oviya on Sun Sep 06, 2015 1:29 pm

அமைச்சரவை பதவி பிரமாணத்தின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் ஒருவர் தனக்கு கிடைத்த அமைச்சு பதவி போதவில்லை என கூறி அவரது கட்சி அலுவலகத்தினுள் பேய் ஆட்டம் ஆடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த உறுப்பினர் கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக செயற்பட்ட ஒருவராகும். அத்துடன் கடந்த காலங்களில் பொது வேட்பாளராக போட்டியிடுமாறு எதிர்க்கட்சியில் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக அறிவித்து வந்த ஒருவராகும்.

அவர் பதவி பிரமாணங்கள் வழங்கப்பட்ட பின்னர் தனது அலுவலகத்திற்கு சென்று அங்கீகார சான்றுகளை தூக்கி எறிந்து விட்டு, தனக்கு கீழ் நோக்கி செல்லும் அமைச்சரவை மட்டுமின்றி மேல் நோக்கி செல்லும் அமைச்சு பதவியையும் அதனுடன் இணைத்து வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

இது தொடர்பில் தான் மனமுடைந்துள்ளதாகவும் மீண்டும் முன்னணியின் ஏனைய தரப்புடன் இணைந்து கொள்வதாகவும் அவர் உளறியுள்ளார்.

எப்படியிருப்பினும் இதுவரையில் தனக்கு கிடைத்துள்ள அமைச்சு பதவியை தொடர்வதற்கு மனதினை சரி செய்து கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

குறித்த உறுப்பினர் ஒரு லட்சத்திற்கு அதிகமான விருப்பு வாக்குகளை பெற்றிருந்தாலும் அவர் பிரதிநிதித்துவப்படுத்திய தொகுதி மற்றும் தலைவராக செயற்பட்ட மாவட்டத்தில் அவர் உட்பட சுதந்திர கட்சி தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum