Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


எதிர்க்கட்சித் தலைவர் சம்மந்தனுக்கு நல்லாசி வேண்டி மட்டக்களப்பில் விசேட வழிபாடுகள்

Go down

எதிர்க்கட்சித் தலைவர் சம்மந்தனுக்கு நல்லாசி வேண்டி மட்டக்களப்பில் விசேட வழிபாடுகள்

Post by oviya on Fri Sep 04, 2015 3:15 pm

நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தெரிவு செய்யப்பட்டதை கொண்டாடும் முகமாகவும் அவருக்கு ஆரோக்கியமான நல்லாசியும் வேண்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று அதிகமான இந்து ஆலயங்களில் விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களினால் வாகரை, வாழைச்சேனை, சித்தாண்டி, வந்தாறுமூலை, செங்கலடி, தன்னாமுனை, மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை, மண்டூர் போன்ற இடங்களில்,

பட்டாசு கொளுத்தியும் இனிப்புப் பண்டங்கள் பரிமாறியும் ஆலயங்களில் பொங்கல் பானை வைத்தும் அத்துடன் குளிர்பானங்கள் வழங்கியும் தங்களின் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களையும் நடாத்தியிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் போன்றவர்களினாலும் இரா.சம்மந்தன் அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கும் நீண்டகால அரசியல் பயணத்திற்காக வேண்டியும் வழிபாடுகள் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum