Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


அமைச்சர்களான இரு முன்னாள் முதலமைச்சர்கள்!

Go down

அமைச்சர்களான இரு முன்னாள் முதலமைச்சர்கள்!

Post by oviya on Fri Sep 04, 2015 3:15 pm

வட மேல் மற்றும் ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர்கள் இன்று அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
வடமேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர, ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் இன்று அமைச்சர்களாக சத்தியப் பிரமாணம் செய்தனர்.

தயாசிறி ஜயசேகர விளையாட்டுத்துறை அமைச்சராகவும் ஹரின் பெர்னாண்டோ தொலைத் தொடர்புகள் மற்றும் டிஜீட்டல் தொழிற்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சராகவும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தயாசிறி ஜயசேகர, கடந்த வடமேல் மாகாண சபைத் தேர்தலின் போது அந்த கட்சியில் இருந்து விலகி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றப் பின்னர் வடமேல் மாகாண முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு கடந்த ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஹரின் பெர்னாண்டோ போட்டியிட்டார்.

அந்த தேர்தலில் அவர் அதிக விருப்பு வாக்குகளை பெற்ற போதிலும் ஐக்கிய தேசியக் கட்சியினால், ஊவா மாகாண சபையை கைப்பற்ற முடியவில்லை.

இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதை அடுத்து, ஊவா மாகாண சபையிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த மூன்று மாகாண சபை உறுப்பினர்கள் ஹரின் பெர்னாண்டோவுக்கு ஆதரவு வழங்கியதால், சபையில் பெரும்பான்மை பலத்தை பெற்றவர் என்ற வகையில் ஹரின் பெர்னாண்டோ முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், தயாசிறி ஜயசேகர, ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகினர்.

இரு பிரதான கட்சிகளின் இணைந்து ஏற்படுத்தியுள்ள தேசிய அரசாங்கத்தில் இருவரும் அமைச்சர்களாகியுள்ளனர்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum