Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


அவுஸ்ரேலியா கம்போடியா ஒப்பந்தம் முறிவடைந்தது? அகதிகளை அலையவிடும் அவலமா?

Go down

அவுஸ்ரேலியா கம்போடியா ஒப்பந்தம் முறிவடைந்தது? அகதிகளை அலையவிடும் அவலமா?

Post by oviya on Mon Aug 31, 2015 3:11 pm

புகலிடக் கோரிக்கையாளர்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் கம்போடியா- அவுஸ்திரேலியா நாடுகளுக்கு இடையே செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை முறிவடைந்துள்ளதாக வெளியான செய்திகளை அவுஸ்ரேலியா அரசு நிராகரித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் கடந்த செப்டம்பர் மாதம் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் படி அவுஸ்ரேலியாவில் அகதி அந்தஸ்து கோரியவர்களை நவ்ரூ முகாமிலிருந்து மாற்றி அங்கிருந்து கம்போடியாவில் குடியமர்துவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம் கம்போடியா அரசுக்கு 40 மில்லியன் டொலர்களையும் அவுஸ்ரேலியா அரசாங்கம் வழங்கி இருந்தது.

எனினும் இது வரையில் 4 புகலிடக் கோரிக்கையாளர் மட்டுமே கம்போடியாவுக்கு அனுப்பபட்டுள்ளார்கள்.

இந்நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கம்போடிய ஊடகங்களுக்கு அரசாங்க பேச்சாளர் இனியும் எவரையும் தம் சொந்த நாட்டிற்கு அழைத்து வருவதற்கான எவ்வித திட்டங்களும் இல்லையென்பதை மேற்கோள் காட்டி கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை கம்போடிய உள்துறை அமைச்சர் நேற்றைய தினம் பத்திரிக்கைக்கு வழங்கிய செவ்வியில் அவுஸ்திரேலியாவில் இருந்து விடுவிக்கப்பட்ட நான்கு அகதிகளும் தன் சொந்த நாட்டில் சந்தோஷமான வாழ்க்கை வாழ்வதாக தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக உண்மை நிலையை அவுஸ்ரேலியா மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று லேபர் கட்சி வலியுறுத்தி உள்ளது.

எனினும் இன்று சிட்னியில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீலி பிஷப் கருத்து தெரிவிக்கையில்,

‘ஒப்பந்தமானது சிதைந்துள்ளது’ எனும் கருத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

உங்களின் அரச அதிகாரியினால் கூறப்படும் அறிக்கையினை நம்பியிருப்பதாக தெரிவித்த அவர் தான் கம்போடிய வெளிவிவகார அமைச்சருடன் உற்பத்தி தொடர்பான கலந்துரையாடலை மேற்கொண்டதாவும் குறிப்பிட்டுள்ளார்.

எதுவாயினும் அபட் அரசாங்கத்தின் அகதி கொள்கைகளுக்கு அனைத்து அகதிகள் அமைப்புக்களும் பெரும் எதிர்ப்பை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum