Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


மாகாண சபை உறுப்பினர்கள் நியமன விவகாரம்! ஐ.தே.க. பொதுச் செயலாளருக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை

Go down

மாகாண சபை உறுப்பினர்கள் நியமன விவகாரம்! ஐ.தே.க. பொதுச் செயலாளருக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை

Post by oviya on Thu Aug 27, 2015 3:00 pm

ஊவா மாகாண சபைக்கு உறுப்பினர்கள் நியமன விவகாரத்தில் எதிர்வரும் செப்டம்பர் 09ந் திகதி வரை ஐ.தே.க. பொதுச் செயலாளருக்கு இடைக்காலத் தடை விதித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐ.தே.க. சார்பில் போட்டியிட்டிருந்த பிரதீப் விஜயவர்தன என்பவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இந்த தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு ஊவா மாகாண சபைக்குத் தெரிவாகாத ஐ.தே.க. வேட்பாளர்களில் விருப்பு வாக்கு அடிப்படையில் பிரதீப் விஜயவர்தன தற்போது முன்னணியில் இருக்கின்றார்.

எனினும் நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக மாகாண சபையில் ஏற்பட்டுள்ள இரண்டு வெற்றிடங்களுக்கு தனக்குப் பதிலான வேறு இருவரை நியமிக்க கட்சி தீர்மானித்திருப்தபாகவும், அதனை தடை செய்து இடைக்காலத் தடை உத்தரவு வழங்குமாறும் மனுதாரர் நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்திருந்தார்.

இதன் அடிப்படையில் எதிர்வரும் செப்டம்பர் 09ந் திகதி வரை ஊவா மாகாண சபைக்கு உறுப்பினர்களை நியமிக்கும் விவகாரத்தில் கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி அஜித் அனவரத்ன ஐ.தே.க. பொதுச் செயலாளர் கபீர் ஹாசிமுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum