Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


மைத்திரியின் கொள்கைகள் சர்வதேசத்தின் பாராட்டை பெற்றுள்ளன: மகிந்த சமரசிங்க

Go down

மைத்திரியின் கொள்கைகள் சர்வதேசத்தின் பாராட்டை பெற்றுள்ளன: மகிந்த சமரசிங்க

Post by oviya on Thu Aug 27, 2015 2:55 pm

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வேலைத்திட்டங்கள் மற்றும் கொள்கைகள் சர்வதேசத்தின் பாராட்டுக்களை பெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம் கடும் சீன ஆதரவு கொள்கையை முன்னெடுத்து வந்தது.

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த கொள்கைக்கு பதிலாக அனைத்து நாடுகளுடனும் நட்பு மற்றும் நடுநிலையான தொடர்புகளை முன்னெடுத்து வருவதால், அடுத்த மனித உரிமை ஆணைக்குழுவின் மாநாட்டின் போது இலங்கைக்கு பாரிய சாதக நிலைமை உருவாகும்.

கடந்த காலங்களில் மனித உரிமை ஆணைக்குழுவின் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக தொடர்ந்தும் யோசனைகளை முன்வைத்த அமெரிக்கா உட்பட சகல நாடுகளின் நல்லெண்ணத்தை ஜனாதிபதி பெற்றுள்ளார்.

இதன் காரணமாக மனித உரிமை பிரச்சினை தொடர்பான உள்நாட்டு விசாரணைக்கு கூடிய ஒத்துழைப்புகளை வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் தூரநோக்கமும், நட்பு ரீதியான வெளிநாட்டு கொள்கைகளே இதற்கு காரணம் எனவும் மகிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum