Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


எக்னெலியகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் மேலும் 4 இராணுவ அதிகாரிகள் கைது

Go down

எக்னெலியகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் மேலும் 4 இராணுவ அதிகாரிகள் கைது

Post by oviya on Mon Aug 24, 2015 3:19 pm

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலியகொட காணாமல்  போன சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர், மேலும் 4 இராணுவ அதிகாரிகளை கைது செய்துள்ளனர்.
இரண்டு லெப்டினட் கேர்ணல்கள், சார்ஜன்ட் மற்றும் கோப்ரல் தர அதிகாரிகளே இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக இவர்கள் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
பொதுத் தேர்தல் நடைபெற்ற காரணத்தினால், எக்னெலியகொட சம்பந்தமான விசாரணைகள் பிரதமரின் உத்தரவின் பேரில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
இராணுவத்தினரை கைது செய்வதால் இராணுவத்திற்குள் எதிர்ப்புகள் கிளம்பக் கூடும் என இராணுவ தலைவர்கள் சுட்டிக்காட்டியதை அடுத்தே அரசாங்கம் விசாரணைகளை தற்காலிகமாக நிறுத்தியது.
எக்னெலியகொட கடத்தப்பட்டு காணாமல் போனமை சம்பவதுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட இரண்டு தமிழர்களும் இராணுவ சார்ஜன்ட் ஒருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum