Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


மேல் மாகாண முதலமைச்சர் பதவிக்காக பலர் போட்டி

Go down

மேல் மாகாண முதலமைச்சர் பதவிக்காக பலர் போட்டி

Post by oviya on Fri Aug 21, 2015 3:23 pm

மேல் மாகாண முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ள பலர் போட்டியிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேல் மாகாண முதலமைச்சராக கடமையாற்றி வந்த பிரசன்ன ரணதுங்க இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ளார்.

இவ்வாறு தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியதனால் ஏற்பட்டுள்ள முதலமைச்சர் வெற்றிடத்திற்காக பலரும் போட்டியிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேல் மாகாணசபையின் சிரேஸ்ட உறுப்பினரான ஹெக்டர் பெத்மகே உள்ளிட்ட பலரும் முயற்சித்து வருகின்றனர்.

ஹெக்டர் பெத்மகே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தம்மை முதலமைச்சராக்குமாறு கோரியுள்ளார்.

மாகாணசபையின் தவிசாளர் சுனில் விஜேரட்ன அமைச்சர்களான காமினி திலகசிறி ரஞ்சித் சோமவன்ச ஆகியோரும் இவ்வாறு முதலமைச்சர் பதவியை வழங்குமாறு கோரியுள்ளனர்.

மாகாணசபையின் சிலர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை நாடி பதவிக்காக சிபாரிசு செய்யுமாறு கோரி வருவதாக மாகாணசபையின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum