Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


தேர்தல் சட்டங்களை பாதுகாப்பதற்கு பொலிஸாருக்கு ஆதரவு வழங்கவும்: பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன்

Go down

தேர்தல் சட்டங்களை பாதுகாப்பதற்கு பொலிஸாருக்கு ஆதரவு வழங்கவும்: பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன்

Post by oviya on Tue Aug 18, 2015 3:14 pm

பொது தேர்தல் கால பகுதியினுள் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடாத்துவதற்கு பொலிஸாருக்கு வழங்கிய ஆதரவினை தேர்தலுக்கு பிந்தைய கால பகுதியிலும் வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன் கேட்டு கொண்டுள்ளார்.:
பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

2012ஆம் ஆண்டில் இருந்து இதுவரையில் 09 மாகாண சபைத் தேர்தல்கள் மற்றும் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றுள்ளன அவற்றில் மிகவும் சமாதானமான தேர்தல் இம் முறை நடைபெற்ற தேர்தல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொது தேர்தல் அறிவித்த ஜுன் மாதம் 26ஆம் திகதியில் இருந்து இதுவரையிலும் பொலிஸ் தலைமையகத்திற்கு 313 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், 405 பேருக்கு எதிராக வழங்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பி்ட்டுள்ளார்.

இக்காலப்பகுதியினுள் 899 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 251 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum